168 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்று, இராக்கதர் குலத்தை அவர்கள் வேரறுக்க ஏற்றுக் கொண்ட சபதத்தைக் குறிப்பிட்டாள்; அவர் களுடைய ஆற்றலையும், பெயரையும், பரம்பரை யையும் கூறினாள். ராவணனைக் காண வரும்பொழுதே சீதையைப் பற்றிக் கூறி அவனை மயங்கச் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொண்டு வந்த சூர்ப்பனகை, ஏன் இவ்வாறு இராமனைப்பற்றிப் பேசுவதில் காலந்தாழ்த்த வேண்டும்? அவளால் இராமனை மறக்க முடியாதது முக்கியமான காரணம்; அதுவேயுமன்றி, இராவணனைத் தன்னிலைக்காக இரங்க வைத்துப் பின்னர் அவனுக்கு இன்பத்தைத் தேடச் சென்று தான் பரிபவப்பட்டதாகக் கூறுவது, அவள் சூழ்ச்சி வெற்றி பெறுவதற்குத் துணையாய் இருக்குமன்றோ? அவள் முதலில் 'மானுடர் தடிந்தனர்' எனக் கூறிவிட்டு, அதன் பின்னர் எவ்வளவுக் கெவ்வளவு அவர்களைப் புகழ்ந்து கூறுகிறாளோ, அவ்வளவுக்கவ்வளவு இராவணன் கோபம் அதிக மாகும்; அவர்களிடத்தில் தன் தங்கை பரிபவப்பட நேர்ந்ததே என்ற ஏக்கமும் அதிகமாகும். எத்துணைப் பராக்கிரமசாலிகளாயிருப்பினும் அவர்கள் மனிதரே அல்லரோ? மேலும், ஒருவனைக் கோபிக்க வைப்பதற்கு, அவனுடை மாற்றானைப் புகழ்வதினும் சிறந்த வாயிலும் இல்லை அன்றோ? - சூர்ப்பனகை எதிர்பார்த்தபடியே இராவணன் அவள் நிலைக்குப் பெரிதும் இரங்கினான்; கரன் உதவி செய்ய முன் வரவில்லையோ? என்று கேட்டான். சூர்ப்பனகை மீண்டும் இராவணன் கேள்விக்கு விடை கூறுபவளைப் போல, அவன் ஆணவத்துக்குத் துர்பம் போட்டாள். -
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/185
Appearance