உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூர்ப்பனகைப் படலம் 9 169 'சொல்என்றன் வாயிற் கேட்டார் தொடர்ந்தெழு சேனை - யோடும் கல்லென்ற ஒலியிற் சென்றார் கரன்முதல் காளை வீரர்; எல்லொன்று கமலச் செங்கண் இராமன் என்று இசைத்த - ஏந்தல் வில்லொன்றில் கடிகை மூன்றில் ஏறினர் மின்னி என்றாள் (கம்பன் - 3130) கரன் முதலியோர் அவள் சொல்லைக் கேட்டு எழுந்தனர் என்பது, நீ இன்னும் இங்கு இருக்கின்றாயே!” என்று இராவணனைப் பழிப்பது போல அமைந்திருக்கிறது. அவர்கள் இறந்தபடியைக் கூறுவது வாயிலாக, சூர்ப்பனகை, மீண்டும் இராமன் ஆற்றலை வற்புறுதிவிட்டாள். இவ்வளவும் நிகழ்ந்த பின்பே, இராவணன் அவளை, நீ என்ன குற்றம் செய்தாய்?" என்று கேட்டான். சூர்ப்பனகையின் பதில் மிகச் சாதுரியமாய் அமைந்திருக்கிறது. நான் செய்த தவறு, எழுதொணாத அழகுடையவள் ஒருத்தியால் ஏற்பட்டது என்றாள். இராவணன் ஆவலோடு, 'ஆரவள்? என்றான். சூர்ப்பனகை வெற்றி பெற்றாள்; தான் வீசிய வலையில் இராவணன் விழுந்து விட்டான். என்பதை மிக நன்றர்க உணர்ந்தாள்; சீதையின் அங்க அழகுகளை விவரமாகக் கூறினாள்; இடையிடையே, 'நீ அவளை அடைந்தால்தான் பெருமையடைவாய்' என்று வற்புறுத்தினாள்; அவன் அயர்ந்திருந்த சமயம் நோக்கித் தன் வார்த்தைகளை நம்பி அவன் சீதையைக் கவரச் செய்யும் முயற்சியில், இராமனுக்கு ஊறு எதுவும் செய்ய வேண்டா' என்றும் கேட்டுக் கொண்டாள்.