170 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் 'மீன்கொண்டுஊ டாடும் வேலை மேகலை உலகம் ஏத்தத் தேன்கொண்டுஊ டாடும் கூந்தல் சிற்றிடைச் சீதை என்னும் மான்கொண்டுஊ டாடு நீஉன் வாள்வலி உலகம் காண யான்கொண்டுஊ டாடுப வண்ணம் இராமனைத் தருதி' . . - என்பால் (கம்பன் - 3145) நீ பிறந்ததன் பயனை இனியே - இவளைப் பெற்ற பின்பே - அடையப் போகிறாய் என்று பேசியவள், 'இத்தகையவளை உனக்காகக் கவரச் செய்த முயற்சி யில் நான் அவமானமடைந்தேன்', எனக் கூறி முடித்தாள். கரன் முதலியோரைப்போல இராவணன் தன்னிடத்தில் மிக்க அன்புடையவன் அல்லன் என்று சூர்ப்பனகை எண்ணியிருந்தாள். அவன் அரசன் என்ற முறையில், கரனைப்போலத் தங்கையைக் கண்டவுடன் போருக்கு எழாதது அவள் எண்ணத்துக்கு உறுதியளித்தது. இதுவன்றியும், அவள் சீதையைப்பற்றிப் பேசத் தொடங்கியது, அண்ணனைக் கவிழ்க்கச் செய்த சதியாகையால், தன் உண்மையான மன நிலையை அவன் எங்குக் கண்டு கொள்வானோ என்று ஐயுற்ற அவள், வள்ளலே! உனக்கு நல்லேன். நின் மனையில் வாழும் கிள்ளை போல் மொழியார்க் கெல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றோ?' என்று கூறுகிறாள். > - இராவணனுக்கு உடன் பிறந்தவளாகையால், சூர்ப்பணகை அவனைப்பற்றி மிக நன்றாய் அறிந்திருந்தாள். பல்லாயிர ஆண்டுகளாகப் போரின்மையால், சோம்பலுற்றுப் பொழுது போக்காக இராவணன் விரும்பித்திளைத்த பெண்ணின்பத்தில்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/187
Appearance