172, இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தெரியாமல் அல்லலுற்றழிந்தார் பலர். இயற்கை யிலேயே அமைந்து கிடக்கும் இவ்வுணர்ச்சியைக் கல்வி என்னும் சாணையில் தீட்டிய, அறிவாகிய வாளைக் கொண்டு அறுத்தொழித்தாலன்றி வாழ்க்கை பயனற்றதாய் முடியும். இவ்வுணர்ச்சியின் வன்மையை வியவாத புலவர் உலகத்திலில்லை; இதனை அவருள் பலரும் பலபடியாகப் கூறியுள்ளனர். ஆசிரியர் சாத்தனார் மணிமேகலையின் கூற்றாக இவ்வுணர்ச்சியின் வன்மையை எடுத்துக் காட்டி யிருக்கிறார். பளிக்கறையில் ஒளிந்திருந்தாள் மணிமேகலை. வெளியே நின்ற உதயகுமாரன், அவ் அறைக்குள் செல்ல வழி காணமுடியாமல் தவித்துத் திரும்பிவிட்டான். அவன் சென்ற பின் வெளியே வந்த மணிமேகலை, தோழி சுதமதியை நோக்கி, "கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள் வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டி' என்று இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்; இதுவோ அன்னாய் காமத் தியற்கை ? w (மணிமேகலை, 5:85-90) எனக் கேட்கிறாள். இத்தகைய வன்மையும் தன்மையும் உடையதுதான் காமம். பகைவரிடத்தும் நட்பினரிடத்தும் வேற்றுமையின்றிச் செல்லும் தகைமையது இஃது ஒன்றே. எனினும், என்ன? மணிமேகலை இதனை அடக்கி வெற்றி பெற வில்லையா? நன்னெறிக்கண் சென்ற இயற்கை உணர்ச்சியையே அவள் அடக்கிவிட்டாளே ! தவறானது எனத் தான் உணர்ந்திருந்ததோடு, பலரும் புகழுக்குப் பங்கம் விளைவிக்கும் எனத் தடுத்துரைத்தும், இராவணன் இதனை வளர
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/189
Appearance