தீமையின் முதற்படி 9 173 விட்டானே! மனிதனுக்குள்ள ஒருணர்ச்சி காமம் என்றில்லாமல், இராவணன் அதனையே தன் வாழ்க்கையின் தத்துவமாகவன்றோ கருதிவிட்டான்! அரசியல் நெறி பிறழ்ந்து, தன் கடமைகளையும் மறந்து, முயன்று பெற்ற பெருமை, புகழ், கல்வி முதலிய அனைத்தையும் துறந்து, பஞ்சையாம் ஒரு பெண்மகள் போலப் பரிதவிக்கத் தொடங்கிவிட்டானே! செய்யத் தக்கது. இது, தகாதது இது என்ற ஆராய்ச்சி சிறிதும் இல்லாமல், மனம் செலுத்திய வழியில் வாழ முற்படு கிறான் இலங்கை வேந்தன். இல்லை! அவனை அங்ங்ணம் வாழ முற்படச் செய்தது காமம். இதோ காணலாம் அவன் வாழ்க்கை முறைமையை. 'ஆக்கை தீய உள்ளம் நைய ஆவி வேவ தாயினான் 'ஊதுவன் துருத்தி போல் உயிர்த்து யிர்த்து உயங்கினான். 'உரங்கு டைந்து நொந்து நொந்து உளைந்து - உள்ைந்துஒ துங்கினான்' 'தென்றல் வந்து எதிர்த்த போது சிறு வானும் ஆயினான் . . • * (கம்பன் - 3156, 3157, 3159, 3160) இவற்றால் அவனுடைய வாழ்க்கையே சீதையின் பால் கொண்ட காமத்தின் உருவெடுப்பாய் மாறிவிட்டதைத் தெளியலாம். - . . 'இத்தகைய மனநிலை கற்றறிவமைந்த ஒருவனுக்கு ஏற்படக் கூடுமா!' என ஐயுறலாம். அவ் ஐயத்தில் உண்மை இல்லாமல் இல்லை. சாதாரண நிலையிலுள்ள மனிதனுக்கு எல்லாப் பண்புகளும் ஒவ்வோர் அளவில் அமைந்திருக்கும். இவற்றுள் ஒன்று சிறிது மிகின், வேறொன்று தாழ்ந்து கொடுக்கும். ஆனால், ஒரு சிலரிடத்து இரண்டொரு பண்புகள்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/190
Appearance