உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இராவணன் வாழ்க்கையில், இயற்கையின் கட்டாயத்தால் ஏற்பட்ட இப்போக்கை நன்கறிந் தாலன்றி நாம் அவன் மேன்மையை உணர்ந்த வர்களாக மாட்டோம். இதை நன்குணர்ந்த கவிஞன் நம்மை விழிப்புடன் இருக்கச் செய்ய, இராவணனைப் புகுத்தும் காலங்களிலெல்லாம், அவனைச் சூழத் தேவமாதர் இருந்ததை வற்புறுத்துகின்றான். அரியணையில் வீற்றிருக்கும்போதும், சேனையைக் காணச் செல்லும் பொழுதும், அவனுடன் அரம்பையர் தோற்றமளிக்கின்றனர். தன்னை ஏற்றுக்கொள்ளும்படி சீதையைத் துண்டச் சென்ற காலத்திற்கூட (நிந்தனைப் படலம்) இராவணன் மேனகை, உருப்பசி முதலியோரை உடனழைத்துச் சென்றான் என்று கவிஞன் கூறுவானானால், இராவணன் மனத்தில் மகளிர் பெற்ற இடம் எவ்வளவு அகல ஆழங்களை உடையது என்பதை எளிதில் அறியலாம். அவன் மந்திரப் படலத்துள்ளும் அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினானாய் இருந்தவனல்லனோ! சீதையை எடுத்து வரச் செல்லுகையில், அச்செயலை வஞ்சனையால் செய்ய முற்பட்டானாகையால், அவன் மகளிர் துணையின்றிச் சென்றான் எனக் காரணம் காட்ட வேண்டிவருகிறது! இராவணனுடைய உடன் பிறந்தவளாய் இருந்தமையார், சூர்ப்பணகைக்கு அவனது இப் பண்பு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவேதான், இராமனை அடைவதற்குத் தடையாய் உள்ள சீதையை அப்புறப் படுத்துவதற்கு அவனே தகுந்தவன் என்று முடிவு கட்டினாள்; அத் தீர்மானத்துடனேயே அவனைக்