தீமையின் முதற்படி 9 179 மாரீசனுக்கு இந் நோக்கம் சற்றும் பிடிக்கவில்லை. சிறந்த நிலைக்குத் தன்னை முயன்று உயர்த்திக் கொண்டவன், தானே பழியையும், பாவத்தையும், இறுதியையும் தேடிக்கொள்வது அவனுக்கு மிக்க வருத்தத்தை அளித்தது. திறத்திற னாலோ செய்தவம் முற்றித் திருவுற்றாய் மறத்திற னாலோ சொல்லுதி சொல் ஆய் மறைவல்லோய்! அறத்திற னாலே எய்தினை அன்றோ அதுநீயும் புறத்திற னாலே பின்னும் இழக்கப் புகுவாயோ? (கம்பன் - 3246) என வினவுகிறான் மாரீசன். மாரீசனுக்குத் தெரிந்த அளவு கூட அறம், மறம் இவைகளின் வேறுபாடு இராவணனுக்குத் தெரியவில்லையா? அதுவன்று; காம மயக்கம் இராவணனை இவைகளுக்குள்ள வேறு பாட்டை உணரவொட்டாமற் செய்து விட்டது. நான் வேண்டியபடி செய்யாவிட்டால், உன்னைக் கொல்வேன்! என்று தான் உதவி வேண்டிச் சென்ற மாமனையே எச்சரிக்கத் துரண்டிற்றென்றால், அதன் வன்மை எத்தகையது! மாரீசன், இவனுக்கு நன்மை தீமைகளை எடுத்துக் கூறுவதில் பயனில்லை' என்று உணர்ந்துகொண்டான்; . ‘இவன் கையால் உயிரிழப்பதினும் இராமன் அம்பால் உயிர் துறப்பது சிறந்தது என முடிவு செய்துகொண்டான்; எனினும், நல்லவனாய் வாழ்ந்து பெருமை பெற்ற இராவணன், பழி எய்துவதைத் தடுக்க மீண்டும் முயற்சி செய்தான்; ‘நன்மை தீமைகளை மறந்தாலும், இராவணன் தன் வீரத்தைப் பழிப்பதைப் பொறுக்க மாட்டான்' என்று எண்ணியவனாய், புறத்தினி உரைப்ப தென்னே புரவலன்_தேவி தன்னைத் திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத் தாகும்;
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/196
Appearance