பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அறத்துளது ஒக்கு மன்றே அமர்த்தலை வென்று கொண்டுன் மறத்துறை வளர்த்தி மன்ன! என்னமா ரீசன் சொன்னான் (கம்பன் - 3272) சுத்த வீரன் என்று எண்ணிக்கொள்ளும் எவனுக்கும் இது புலப்படாமல் இராது. இராவணனோ, சற்று முன்னரே, திக்கயம்ஒ ளிப்பநிலை தேவர்கெட வானம் புக்கவர்இ ருக்கைபுகை வித்துஉலகம் யாவும் சக்கரம் நடத்தும்.எனை யோதயர தன்தன் மக்கள்நலி கிற்பர்? இது நன்றுவலி யன்றோ ! - (கம்பன் - 3264) எனக் கூறி மார் தட்டிக்கொண்டான். இருந்தும், மாரீசன் கூறிய செந்நெறியிற் செல்ல அவனுக்கு விருப்பமில்லை. அதற்கு அவன் கூறும் காரணமும் விநோதமானது. ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கு மன்றே மானவள்? ஆத லாலே மாயையின் வலித்தும் என்றான் . (கம்பன் - 3273) இராம்ன் இறந்தது கேட்டால், அவளும் உடனே இறந்துபடுவாளாம்! அவளைப் பின்னர் அடைவது எப்படி? இராவணன் காம மயக்கத்தால் அறிவற்ற வனாகிவிட்டான் என்பதற்கு வேறு சான்று எதற்கு? 'புருடன் இறந்தது கேட்டு இறக்கும் கற்புடையவள், பிற புருடன்ை ஏற்றுக்கொள்ள் மனம் ஒப்புவாளா? என அவன் சிந்திக்காதது ஏன்? காமமும் கள்ளும் ஒரே தன்மையையுடையன. அவை தம்மை விரும்பினார் அறிவை முதலிற் பற்றிக் கொண்டு, பின்னர் அவர் உயிருக்கு உலை வைக்கும்