தீமையின் வளர்ச்சி 181 பண்புடையன. காமத்தால் பீடிக்கப்பட்ட இராவணன், முதலில் தன் அறிவை இழந்து, சானகியை மனத்தே சிறை வைத்தான். பின்னர், அரச நீதி, புகழ், பெருமை முதலியவற்றை மறந்தான்; சூர்ப்பணகையை மந்திரியாக ஏற்றுக்கொண்டான். மாரீசனை, நீ மந்திரித் தொழிலை ஏற்றுக்கொள்ள வேண்டா. நான் கட்டளையிடுகிறபடி நட' என்று ஆணையிட்டான்; தன் வீரத்தையும் மறந்து, இப்பொழுது வஞ்சனையால் சானகியைக் கவர முற்பட்டான்; தன்னால் ஒரு பொரு ளாக நினைப்பதற்கும் தகுதியற்ற மானுடன் என்று இராமனைக் கருதும் இராவணன், அவன் மனைவியை வஞ்சனையாற் கவர்ந்து செல்வதற்குக் காரணமும் கற்பிக்க முன்வந்தது, அவன் அழிவை நோக்கி இரண்டாம் படியில் காலை ஊன்றி விட்டான் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. 3. ಫೇಖLDHರ್ಪ ಎSrt+F ஒரு கல்லை நீரில் எறிந்தால், உடனே அலைகள் தோன்றும். எறியப்பட்டது எத்துணைச் சிறிய கல்லோ அதற்குத் தக்கவாறு அலைகளின் தோற்றம், வேகம், அளவு முதலியவைகள் மாறுமேயொழிய, அவை தோன்றாமலே இருக்கமாட்டா. இத் தத்துவத்தைப் போன்றதே மக்கள் செயல்கள் விளைவுகளைத் தோற்றுவிப்பதும். கல்லால் தோற்றுவிக்கப்படும் அலைகளில் நல்லவை தீயவை என்ற பாகுபாடு இல்லை. ஆனால், மக்கள் செயல்களிலும் அவை தோற்றுவிக்கும் விளைவுகளிலும் இப்பாகுபாடு உண்டு. கல்லும், அது தோற்றுவிக்கும் அலைகளும் அஃறிணைப் பொருள்களாகையால், அவைகளில் நன்மை, தீமை என்ற பாகுபாடுகளுக்கு இடம் இல்லை.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/198
Appearance