பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் ஆனால், செயல்கள் மக்களைக் கருத்தாவாகக் கொண்டு தோன்றுவனவாகையால், அவைகளைப் பாகுபாடு செய்து உபசரிக்கிறோம். அவ்வாறே செயல் களின் விளைவுகளும் பாகுபாடு செய்யப்படுகின்றன. இராவணன் பிறன் மனைவியினிடத்தில் காதல் கொண்டது ஒரு தீச் செயல். இதை அக் காவியத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரும் வற்புறுத்திக் கூறுகின்றனர். அவன் செய்த தீமை, மனத்தால் தீமையை நினைத்ததோடு நின்று விடவில்லை. நினைப்பு, காரியப்படும் அள்வுக்கு அதிகரிக்கிறது. இம்மட்டோ இராமனை வஞ்சித்துச் சீதையைக் கவரும் அளவுக்கு விரிவடைகின்றது. மாரீசன் இத் தீச் செயலின் திறத்தை நன்குணர்த்திருந்தான், ஆனால், இராவணன் மனத்தை அவனால் மாற்ற முடியவில்லை. இருப்பினும், மாரீசன் இராவண னுடைய தீச்செயலின் எல்லையையாவது குறைக்கலாம் என நம்பிச் சீதையை வஞ்சனையாற் கவர்வது அவனுடைய வீரத்துக்கு ஏலாதது என்று கூறினான்; ஆனால், இராவணன் அசைந்து கொடுக்க வில்லை. - ஒரு பழம் கெடத் தொடங்கினால், அதை உடனே கவனித்து, அழுகிய பகுதியுடன் அதை ஒட்டிய பகுதியையும் அறுத்தெறிந்தால்தான். எஞ்சியுள்ள பழமாவது மிஞ்சும் இல்லையேல், பழம் முழுவதும் சிறிது சிறிதாக அழுகிக்கொண்டே வரும். சீதையை இராவணன் மனத்தில் சிறை வைத்தது ஒரு தீச்செயல். இதன் விளைவினின்றும் அவன் தப்ப வேண்டு மானால், அவ்வெண்ணத்தை முற்றிலும், கைவிடுவதோடு, சில காலம் அதற்குத் தன் மனத்தில்