பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீமையின் வளர்ச்சி 6 183 இடங் கொடுத்ததற்குப் பரிகாரமும் செய்ய வேண்டும். இவ்வாறு இராவணனைச் செய்விக்க மாரீசனால் முடியவில்லை. ஆகவே, அவன் சீதையைப்பற்றிக் கொண்ட கருத்தோடு இராவணன் பொறுப்பு நிற்கட்டும் என எண்ணி, அவன் வீரத்தைப் பழித்தான். இங்கு மாரீசன் கையாண்ட விரகு, ஒடும் குதிரையை நிறுத்த முற்படும் ஒருவன், அதை அதன் இச்சைப்படி ஓடவிட்டுப் பின் நிறுத்துவதை ஒக்கும். மாரீசன் நோக்கம், இயற்கையின் போக்குக்கு ஒத்ததே. ஆனால், 'நாம் முரட்டுக் குதிரையை வசப்படுத்த நல்ல குதிரையை வசப்படுத்தும் வழியைக் கையாளு கிறோமே!” என்று எண்ணாமல் இருந்ததுதான் அவன் செய்த பிழை. இது காரணமாக இராவணன் மனத்தை மாற்ற முடியாமற் போனதோடு, அவனும் உயிர் இழக்க நேர்ந்தது. இராவணன் தான் எண்ணியபடியே செய்து முடித்தான். இயற்கையும், அதன் தவிர்க்க முடியாத நெறியே சென்றது. அவன் செய்த தீமைகளுக்குத் தக்கபடி விளைவுகள் தோன்றின. அவைகளைக் கண்டு இராவணனே கலங்கினான் என்றால், அவற்றின் - தீமையின் - எல்லைக்கு அளவு கற்பிக்கக் கூடுமா? அனுமன் அசோக வனத்தை அழித்தான்; இலங்கையை எரித்தான். மூன்று உலகங்களையும் வென்று ஆண்டவனாகிய இராவணனே இவ் அழிவுகளைக்கண்டு கலங்கினான். மயனைக்கொண்டு, அனுமன் இழைத்த இன்னல்களுக்குப் பரிகாரம் தேடிக் கொண்ட பின்னரும், இராவணன் கலக்கம் நீங்கவில்லை. மிகப் பெரிய பொருள்களைப்பற்றிச் சிந்திப்பதற்கே அரசர் மந்திரி சபையைக் கூட்டுவர்.