பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அனுமன் இலங்கைகைய அழித்ததற்குப் பயந்தே இராவணன் மந்திரி சபையைக் கூட்டினான். மிகச் சிறந்தவர்களை மட்டுமே அச் சபையில் இருத்தி, நண்பரைக்கூட வெளியேற்றி, உலகு ஒருங்கே வந்தாலும் பிசைந்தழிக்கும் ஆற்றல் வாய்ந்த காவலாளரை நியமித்ததோடு வண்டுகளையும் காற்றையும்கூட - வரவொட்டாமல் தடுத்தான் என்றால், இராவணனுக்கு அனுமன் செயல்கள் எத்தகைய அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்! இராவணன் சபையைக் கூட்டியது, இனி நடக்க வேண்டுவது என்ன? என்று ஆராய்வதற்கு. அதைப் பற்றித் தான் ஒன்றும் பேசாமல், அவன் நடந்து விட்டவைகளைக் குறித்து ஏங்குவதோடு, இவ்வாறு நடக்கவிட்டமையைக் காட்டிலும் தனக்குத் தாழ்வு வேறு உண்டோ எனக் கேட்கிறான். அழிவைச் செய்த அனுமன் இன்னும் இருக்கின்றான் என்ற எண்ணம் அவனைப் பெரிதும் வருத்துகின்றது. இராவண னுடைய செயல், இவன் ஒரு வீரனா? என்று கேட்க நம்மைத் துாண்டுகிறது. அழிவுக்குத் துன்பமோ, ஏக்கமோ அடைவது வீரருக்குப் பெருமையன்று. இராவணன் இதற்காக மந்திர சபையைக் கூட்டியதே அவன் மனம் சரியான நிலையில் இல்லை என்பதைக் காட்டுகிறது. அச்சபையில் அவன் கழிந்ததற்கு இரங்குவது, வீரம் அவனை விட்டுச் சென்றுவிட்டது என்பதை எடுத்துக் காட்டும் அறிகுறியேயன்றி வேறன்று. எனினும், இராவணன், பின்னர் வீடணனுக்குப் பதில் கூறுகையில், நான் கயிலையை எடுத்தவனாயிற்றே! திக்கயங்களை வென்றவனன்றோ? மூவரும் சேர்ந்து வந்தாலும் மயங்குவேனோ? என்றெல்லாம் இறுமாப்புடன்