பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீமையின் வளர்ச்சி 6 185 பேசுகிறான். அவனது இப்பொழுதைய நிலையை நன்குணரும் நமக்கு அவ்விறுமாப்புச் சிரிப்பையே விளைக்கின்றது. இவற்றால் இராவணன், ஒரு காலத்தில் மிகச் சிறந்த வீரானாய் இருந்தான் என்றும், ஆயினும், இப்பொழுது, பழம் பெருமையைப் பிதற்றும் பேதையாய் மாறிவிட்டான் என்றும் உணர்கிறோம். வீரத்துக்கு இருப்பிடமாய் இருந்தவன் இவ்வாறு முழு மாற்றம் அடையக் காரணமென்னை? நல்நகர் அழிந்ததென நாணினை நயத்தால் உன்னுயிர் எனத்தகைய தேவியர்கள் உன்மேல் இன்னகை தரத்தர ஒருத்தன்மனை உற்றாள் பொன்னடி தொழத்தொழ மறுத்தல்புகழ் போலாம்! (கம்பன் - 6120) என்பது கும்பகருணன் கூற்று. - ராவணனைத் தங்கள் உயிரைப்போல நேசிக்கும் தேவியர்கள், அவன் காம மயக்கத்தில் ஆழந்து அல்லற்படுவதைக் கண்டிரங்கி, அவனை முன்னிலும் பன்மடங்கு அதிகமாக நேசிக்கின்றனர். ஆனால், அவை இராவணனை ஆற்றுவதை விட்டு, அவனுடைய தாபத்தை அதிகப்படுத்தவே பயன் படுகின்றன. அவன் சீதையின் கால்களில், அவள் மறுக்க மறுக்க, மேலும் மேலும் வீழ்ந்து தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறான். இது புகழ் தரும் செயலா? இத்தகைய தாழ்வை இன்பமென ஏற்றுக் கொள்ளும் நீ, நகரின் அழிவைக் கண்டு நாணுவானேன்? உனக்கு நாணம் என்ற உணர்ச்சி இருக்குமேயானால், இம்மயக்கத்திலிருந்து விடுபட மாட்டாயா? எனக் கும்பகருணன் கேட்கிறான். இதனால், காம மயக்கம் காரணமாக, இராவணன் தன்