தீமையின் வளர்ச்சி 6 189 உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் நன்மை தீமை என்ற இரண்டின் கூறுபாடுகளும் அமைந்திருக்கின்றன. நன்மையைப் பயப்பதும் தீமையைத் தருவதும் அவற்றின் இயற்கையல்ல; அவற்றைப் பயன்படுத்தும் மனிதன் அறிவைப்பற்றியே அவை நல்லவற்றையும் தீயவற்றையும் பயக்கின்றன. 'முக்கோடி வாணாளும் முன்றுடைய பெருந்தவமும் எல்லையற்ற புகழை ஈட்டப் பயன்படும் என்பது உண்மையே; ஆனால் இராவணன், அவற்றைப் புகழ் ஈட்டப் பயன்படுத்தாவிட்டால் அதற்காக அவை பொறுப்பேற்றுக்கொள்ளுமா? புகழ் ஈட்டுவதற்கு வேண்டிய சாதனங்களைப் பெற்றிருந்தும், இராவணன் ஈட்டிய புகழையும் இழந்துவிட்டிருக்கின்றான். பின்னர்ப் புகழ் ஈட்டவேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு எழவில்லை. இதற்குக் காரணம், அவன் தன் அறிவையும் இழந்துவிட்டிருந்தமையே! வீடணன், சீதையைத் திருப்பித் தந்துவிடுவதே சிறந்தது என்ற கொள்கையை வற்புறுத்தினான். இராமனுடைய வல்லமையை முதலில் வற்புறுத்தி, பின்னர் இராவணனுடைய தோல்விகளைக் குறிப்பிட்டு, அவனுக்கு ஏற்பட்ட சாபங்களையும் விவரிக்கிறான் வீடணன். காம வெறியால், இராவணன், பகைவன் பலத்தைப் பொருட்படுத்த வில்லை. தான் வஞ்சனையால் சீதையைக் கவர்ந்து வந்ததை உணராமல், 'யானிழைத்திட இல்லிழந்து இன்னுயிர் சுமக்கும் மானுடன் வலி நீயலாது ஆருளர் மதிப்பார்? எனத் தன்வெற்றியை இராமன் தடுக்க முடியாதிருந்தது போலத் திரித்துக் கூறுபவனுக்கு அறிவின் கூறு ஓரளவாவது இருந்தது என எவர் ஒப்புவர்? கார்த்தவீரியனும் வாலியும் தன்னை
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/206
Appearance