190 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் வென்றது அவர்கள் வர பலத்தாலேயே ஆகையால், அவர்களுக்குத் தான் தோற்கவில்லை என்பதே இராவணன் வாதம். நந்தியின் சாபத்தைக் குறிப்பிட்டு, அதன்படியே குரங்கு இலங்கையை அழித்தது என்று கூறிய வீடணனுக்கு. அவன் பதிலளித்திருப்பது விந்தையினும் விந்தை! சற்று முன்னர் அனுமன் செயல் களுக்கு அழுங்கிக் கிடந்தவன், இப்பொழுது வாய் கூசாமல், எத்தனையோ சாபங்களை நாம் பெற்றிருந்தும், அவை நம்மை என்ன செய்து விட்டன? என்று திருப்பிக் கேட்கிறான். மனிதர்களை வெல்ல வரம் பெறவில்லை என்று குறிப்பிட்ட வீடணனை எள்ளி நகையாடுகிறான் இராவணன். 'திக்கயங்களை வெல்வதற்கு வரம் பெற்றேனோ? என்று கேட்டுவிட்டு, 'மானுடர் எப்படி வல்லமையுடையவராய் இருத்தல் கூடும்?' என்று வாதாடுகிறான். தேவர்கள் தாம் அளித்த வரங்களுக்குக் கட்டுப்பட்டு வாளா இருந்ததைத் தன் வல்லமைக்கு அடங்கி அவர்கள் சும்மா இருந்ததாகச் சொல்லிக் கொள்கிறான் இராவணன். அவன் அறிவைக் காமம் அறவே அழித்து விட்டது என்றறிய வேறு சான்றும் வேண்டுமோ? பகைவருடைய வல்லமையை இராவணன் பொருட்படுத்தாதற்கு அவன் தன்னைப்பற்றிப் பெருமையாக எண்ணிக் கொண்டிருந்தது மட்டும் காரணமாகாது; அப்பகைவர் வல்லமையை வீடணன் எடுத்துக் கூறியதும் ஒரு காரணமேயாகும். என்னுடன் ஒரு வயிற்றிற் பிறந்த உனக்கு மட்டும் மானுடர் வலிமையுடையவராகத் தோன்றுவது ஏன்?" என்று அவன் வீடணனை நோக்கிக் கேட்கிறான். உண்மையில் இக் கேள்வியை இராவணன் தன் நெஞ்சையே நோக்கிக் கேட்டிருக்கவேண்டும். அவன்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/207
Appearance