உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அப்பொழுது இராவணன் அழிவு, வெகு தொலைவில் இருந்தது. ஆகவே, பெரும்பாலோர் பொருட்படுத்தாத துன்னிமித்தமே தோன்றியது. ஆனால், இப்பொழுது இராவணன் அழிவு நெருங்கிவிட்டதால், துன்னி நிமித்தமும் அதற்கேற்றபடி எவரும் புறக்கணிக்க முடியாத தன்மையுடையதாய்த் தோன்றுகின்றது. இயற்கையின் பொறுப்பு நீங்கிற்று. அஃது இராவணனுக்குத் தன் உள்ளக்கிடக்கையையும், அவன் அழிவெய்துவான் என்ற குறிப்பையும் உணர்த்தி விட்டது. இனி, அழிவடையாமல் தன்னைக் காத்துக் கொள்வது இராவணன் பொறுப்பு. அவன் செருக்குக் GITĮTGRT i DT35 இதைப் பொருட்படுத்தாதிருந்தால், இயற்கை என் செய்யும்? ஒன்றல பகழி என்கைக்கு உரியன உலகம் எல்லாம் வென்றன. ஒருவன் செய்த வினையினும் வலிய வெம்போர் முன்தரு கென்ற தேவர் முதுகுபுக் கமரின் முன்னம் சென்றன. இன்று வந்த குரங்கின்மேற் செல்க லாவோ ? (கம்பன் - 6830) இராவணன் ஒருவனைத் தவிர ஏனையோர் அனைவரும் பெரும்போர் வரப்போகின்றது என உணர்ந்திருந்தனர். இராவணன் மட்டுமே, குரங்கு களை அழைத்துக்கொண்டு இராமன் இலங்கைக்கு வந்தது, சீதையைத் தானடைவதைத் தடுக்கத் தோன்றிய ஒரு சிறு இடையூறு எனக் கருதினான். மனிதர்களையும் குரங்கையும் அவன் தனக்குரிய பகைவர்களாகக் கருதாததற்கு, அவன் தன் பலத்தில் கொண்டிருந்த பெருநம்பிக்கையும், பகைவரைப் பலமுடையவராக வீடணன் கூறியதுமே காரணமாம். மாலியவானைப் போன்ற பொருட்படுத்த வேண்டிய