பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் நம்பிக்கையைத் தளர்த்த இரு சம்பவங்கள் நிகழ்ந்தன. சுக்கிரீவனால் மகுட பங்கம் செய்யப்பட்டது ஒன்று. இதைப் பொருட்படுத்தத் தவறியவன், அங்கதன் கூறிய இங்கு நின்றார்கட்கெல்லாம் இறுதியே என்பதுன்னி, உங்கள்பால் நின்றும் எம்பாற் போந்தனன் உம்பி என்ற குறிப்பையாவது உணர்ந்துகொண்டிருக்கலாம். ஆனால், அது வீடணன் அபிப்பிராயம்' என்ற எண்ணம் அவன் தன்னம்பிக்கையைத் தழைக்கச் செய்தது. ஆகவே, அசட்டை, பகைவரைத் துச்சமாக மதித்தல், செருக்கு ஆகிய குணங்களின் உருவெடுப்பாய் இராவணன் போருக்குச் சென்றான். அவன் நினைத்தபடி இராமன் அவனைக் கண்டு பயந்து விடவில்லை; ஒடவும் இல்லை; போர் செய்தான்: இராவணன் பொருட்படுத்தவேண்டிய முறையிலும் போர் செய்தான். இராவணன் தன்னம்பிக்கை தளரவில்லை. 'கரதுTடனர்களை வென்றவன் இவ்வளவு பலவானாய் இருப்பதில் வியப் பென்னை ?' என்ற எண்ணம் அவன் தன்னம் பிக்கையைத் தளரவிட வேண்டா என உணர்த்திற்று. இவ்வெண்ணத்தோடு போர் புரிந்து வந்தவன், திடீரென்று படைக்கலம் அனைத்தையும் இழந்து தான் தனியே நிற்றலையும் இராமன் அம்பு விடுவதை நிறுத்தி விட்டுத் தனக்கு உபதேசம் செய்வதையும் உணர்ந்தான். 'உபதேச முடிவில், இன்று படைக் கலங்களை இழந்துவிட்டாய், நாளை வா என இராமன் கூறிய சொற்கள் இராவணனைச் சுட்டன. செருக்கினால் தன்னிலை தெரியாமல் ஆகாயத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த இராவணன் திடீரெனக் கீழே வீழந்தான். நிலத்தில் கிடப்பதை