பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அவன் மனவுலகத்திலேயே - கற்பனை உலகிலேயே - வாழ்ந்துவருகின்றான்; சீதையை வஞ்சனையால் கவர்வதற்குக் காரணம் கற்பித்தான்; பகைவரைப் பொருளாக மதிக்க மறுத்தான்; வீடணன் மாறுபாட்டை ஆராயாமல் விட்டான் உற்பாதங் களைப் புறக்கணித்தான். முன்னர், இராமன் இறந்தால் சீதையும் இறந்துவிடுவாளே! என்று மார்சனிடம் ஏங்கியவன், இப்பொழுது அங்கதனிடம், நாளைக்குள் இராமன் இறப்பான்; நான் சீதையை அடைந்து விட்டேன்!' என்று கூறுகின்றான். இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான எண்ணங்களுக்கு இடமளிப்பவனாய், உலக அறிவு ஒரு சிறிதும் இல்லாத வனாய், இராவணன் காம மயக்கத்தில் கட்டுண்டு, அதுவும் கிடைக்கப்பெறாமல், அதை அடையச் செய்யும் முயற்சியிலேயே மனம் உள்ளவனாய், வேறொன்றிலும் பற்றில்லாத வாழ்க்கை உடைய வனாய் இருந்து வந்தான். இத்தகையவன் போரை முன்னின்று நடத்துதல் எவ்வாறு கூடும்? ஆகவே, தோல்வியுற்றான். தோல்வி அடைந்தவுடன், அதற்குக் காரணத்தை ஆராய முற்பட்டான். பகைவன் பலம் ஒன்றுதான் அவனுக்குக் காரணமாகத் தோன்றிற்று. தன் எண்ணத்தைப் பாட்டனிடம் அறிவித்தான். இந்நிலையில் மகோதரன் புகுந்து 'தோல்வியைக் கண்டு மனம் வெதும்புவது வீரர்க்கு அழகோ ? உன் பெருமையயும் பலத்தையும் நினைக்காமல் பிதற்றி விட்டாயே! என்று கூறியவுடன், இராவணன் மீண்டும் பழைய நிலையை எய்தினான்; சற்று முன் கூறியவை களை முற்றிலும் மறந்தான். • - மூவுலகையும் வென்று புகழுடன் அரசாண் டிருந்த இராவணனை, அவனுக்குப் பெண் இன்பத்தில்