உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீமையின் வளர்ச்சி 199 உள்ள பற்றுதலைப் பற்றுக்கோடாகக் கொண்டு, சூர்ப்பனகை தீநெறியிற் செலுத்தினான். இப்பொழுது மகோதரன் அவனுடைய தன்னம்பிக்கையைப் பற்றுக் கோடாகக் கொண்டு, அவனை அழிவெய்தும்வழியிற் செலுத்தினான். மகோதரன் கூறியவை உண்மையே அன்றி வேறன்று. போரில் வெற்றியும் தோல்வியும் மாறி வருவது இயற்கையே. தோல்விக்கு மனமழியாமல் தொடர்ந்து போர் செய்வோரே வெற்றி பெறுவர். ஆனால், இவையனைத்தும் சம பலமுள்ள எதிரிகள் போரிடுவதற்கு ஏற்ற உண்மைகளேயொழிய, ஏற்றத் தாழ்வுள்ளவர்கள் செய்யும் போருக்கு இவை பொருத்தமுடையனவல்ல. இராவணன் இவ் வுண்மையை மறந்தான். அவனை இதை மறக்க வைத்தவை 'இராமன் மனிதன்தானே! என்ற அலட்சிய மனோபாவமும், தான் தேவர்களை வென்றவன் என்ற செருக்குமாம். மகோதரன் தன்னைப்பற்றிக் கூறிய புகழுரைகளால் இராவணன் தான் நேரில் உணர்ந்த இராமன் வல்லமையைப் பற்றிய அறிவைப் புறக்கணித்ததோடு, 'சீதை என்னை எப்படி ஏற்றுக்கொள்வாள்?' என்பதையும் விட்டு, 'ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டாள்? என்ற எண்ணத் துக்கும் இடம் அளித்தான். இவ் வெண்ணத்தை அவன் மனத்தில் தோற்றுவித்தது, சீதை பெண்ணாகையால் தன்னைப்போல இராகவன் வல்லமையை அறிந்திருக்க முடியாது என்ற எண்ணமே. முன்னர்க் காம மயக்கம் காரணமாக இராவணன், வீடணன் எச்சரிக்கைகளையும் பொருளுரைகளையும் பொருட்படுத்தாமல், போரை வரவேற்றுக் கொண்டான்; இப்பொழுது தன்னம்பிக்கை காரணமாகத் தான் அனுபவத்தில்