200 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் உணர்ந்த அறிவையே புறக்கணிக்கத் தலைப்பட்டான் வீடணனை எப்பொழுது பகைவரிடத்து அன்புடை யவன் என்று எண்ணினானோ, அதுமுதல் இராவணன் அவன் பேச்சை ஏற்க மறுத்தான். ஆகவே, வீடணனுடைய உண்மையுரைகள் எடுபடாமற் போனதற்கு நாம் இரங்க வேண்டுமேயொழிய, அதற்காக இராவணனைக் கண்டிப்பதற்கில்லை. மாலியவான் வயது முதிர்ந்தவன்; அனுபவம் நிறைந்தவன். அவன் பேச்சைப் பொருட்படுத்த வேண்டுவது அவசியமே. ஆனால், வயது ஏற ஏற அச்ச உணர்ச்சியும் அதிகப்படுவது இயற்கை, ஆகவேதான், இராவணன் அவன் எச்சரிக்கைகளையும் பொருட் படுத்தவில்லை. முற்றிலும் தகுதியுடையவை என உறுதியாகக் கூற முடியாமற் போயினும், இராவணன் வீடணன், மாலியவான் இவ்விருவர் புத்திமதிகளை ஏற்றுக் கொள்ளாமலிருந்ததற்கு அவனை முழுதும் கண்டிப்பதற்கில்லை. ஆகவேதான் அவனுடைய இப்பிழைகளின் விளைவுகள் அழிவைச் செய்வனவாக இல்லை. பகைவன் வல்லமையையும் சீதையின் திறத்தையும் அவன் நன்குணருமாறு அவனுக்கு நல்ல வாய்ப்புக்களைத் தோற்றுவித்ததோடு நின்று விடுகின்றன. முதற்போரின் இறுதியில் இராவணனுக்கோ, இலங்கைக்கோ அழிவு எதுவும் வந்து விடவில்லை என்பது கருதத்தக்கது. பிறருடைய பொருளுரைகளைத் தள்ளியதால், இராவணன் அழிவை நோக்கி மூன்றாம் படியில் காலை வைத்தானாயினும், அவனுக்கு மீண்டும் திருந்த வாய்ப்பேற்பட்டது. ஆனால், அவ்வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளாமல், மகோதரன் புகழுரைகளால் மயங்கி, அவன் நேரில் அறிந்த தன் அனுபவமான
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/217
Appearance