காப்பியம் $ 3 சமுதாயத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்த பல்வேறு வகைப்பட்ட மக்கள் வாழ்க்கையையும், அவர்கள் எண்ணங்கள், நினைவுகள், குறிக்கோள்கள், செயல்கள் ஆகிய இவற்றையும் கூறும் தன்மை இக்காப்பியத்திற்கே உண்டு. அம்மக்களது வாழ்க்கையைப் பற்றிய முழுத் தகவலையும் தரும் ஒரு சிறந்த கருவூலமாக அது விளங்க வேண்டும். இவற்றைத் தனியான முறையில் பாடபுத்தகம் போன்றும் கூறலாம். அங்ங்னம் கூறும் நூலுக்குச் சமுதாய நூல் (Sociology) என்றும் பெயர். ஆனால், அது யாவரும் கற்று இன்புறும் நிலையில் இராமல் ஒரு சிலர்க்கே பயன்படும். எனவே, யாவரும் விரும்பி அதனைக் கற்கவேண்டுமாயின் அஃது ஒரு காப்பியமாகவே தோன்றல் வேண்டும். அக்காப்பியத் தலைவர், அதன்கண் வரும் ஏனையோர் ஆகியவர் சொல், செயல் என்பவற்றால் அக்கால மக்கள் வாழ்க்கையை எடுத்துக் காட்டவேண்டும். இதனால் மெதுவாகச் செல்லவேண்டிய கட்டுப்பாடும் விரித்துக் கூறவேண்டிய தன்மையும் காப்பியத்திற்கு ஏற்பட்டுவிடுகிறது. பல்லாயிரக் கணக்கான பாடல்கள் பாடப்படுவதும் இக்கருத்தா லேயே. அங்கு, தொடர்ந்து செல்லும் நிகழ்ச்சிகளை, நாம் நின்று அனுபவித்துச் சுவைத்துச் செல்ல வேண்டிய முறையில், அது செல்ல வேண்டும். நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய், நாடகம்போல் அடுக்கி விரைவாக வருமாயின் அது காப்பிய நிலைக்கு ஏற்றதாகாது. பெருங் காப்பியங்கள் தோன்றின காலத்தைப் பற்றிப் பேராசிரியர் 'ஹேகல் கூறும் வாதம் மிக அழகானது. அஃதாவது ஆதி மனிதன், விலங்கு
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/22
Appearance