உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இங்கு, இராவணன் புகழை விரும்பிப் போரை நிறுத்த மறுத்தது நம் மதிப்பிற்குரியதேயானாலும், அவன் அதைத் தன் மகனுக்கு அறிவித்த விதம் கண்டிக்கத் தக்கதாகும், 'இனிப் போரை நிறுத்தினாலும் பழியே சேரும்; ஆகவே, உயிரைக் கொடுத்தாவது நான் போருக்கஞ்சவில்லை என்ற புகழைத் தேடிக்கொள்கிறேன். நீ எனக்காகக் கவலை யுறாதே என்று சொல்லியிருந்தால், இராவணன், இந்திரசித்தன் தன்னிடத்துக் கொண்டிருந்த அன்புக்குப் பொருந்திய அளவு அவனிடம் செலுத்திய வனாயிருந்திருப்பான். இவ்வாறு கூறுவதையும் அவன் பொறுமையுடன் நிதானமாய்க் கூறியிருக்க வேண்டும். இம்முறையைக் கைவிட்டுவிட்டு, அவன் கோபங் கொண்டவனாய் மகனை நோக்கி, ‘உன்னை நம்பி நான் போரில் ஈடுபடவில்லை என்று சொல்வது, மகனுடைய ஆண்மையைப் பழிப்பதோடு, அவன் தான் எதிர்பார்த்த அளவுக்குத் தனக்கு உதவி செய்ய முன் வரவில்லை என்ற குற்றத்தையும் சுமத்துவாகும். மேலும் இவற்றைக் கோபாவேசத்தோடு கூறுவது, உண்மையான மனநிலையைக் கூறுவதாகவும் கருதப் படாது; விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்று மார்தட்டுவதையே ஒக்கும், ஆகவேதான் இந்திர சித்தன், தகப்பன் அறியாமைக்கு மிக இரங்கி, 'ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியைப் பொறுத்தி, யான்போய்க் கழிந்தனன் என்ற பின்னர் நல்லவாக் காண்டி என்னா மொழிந்தனன் . (கம்பன் - 9128) இனி வெற்றி எய்த முடியாது என்று உறுதியாக இராவணன் நம்பினானேயானால், அவன் மகன்