பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீமை முற்றுகிறது : 205 போருக்குச் சென்றதை ஏன் தடுக்கவில்லை? தன் புகழை நிலைநாட்ட விரும்பியவன், தன்னையன்றோ பலியிட்டுக் கொள்ளல்வேண்டும்? பிள்ளையைப் பலியிடத் துணிந்தது எதற்கு? மகன் தன்னைக் கடைக் கணால் நோக்கிஇருகணிர் கலுழப் போவதைக் கண்டும் கொடியோன் கண்கள் நீருகுக்காத காரணம் என்ன ? கும்பகருணனிடத்துக் கொண்டிருந்த அன்புகூட இராவணனுக்கு மகனிடத்தில் இல்லையா? இந்திரசித்தனுடைய முயற்சிகள் தடைப்பட்டன வாயினும், அவனால் பகைவரைக் கலங்கச் செய்ய முடிந்ததை இராவணன் அறிவான். ஆகவே, தனக்குள்ள ஊக்கத்தோடு அவன் போர் செய்தால், வெற்றி கிடைக்கும் என்றே இராவணன் எண்ணினான். ஆகவேதான், அவனுக்கு, மகனைப் போருக்கு அனுப்பும்பொழுது அழுகை வரவில்லை. கும்பகருணன் சென்றது, இராவணன் இராமன் வல்லமையை நேரில் உணர்ந்து வந்த அணிமையி லாகையால், அவன் கூறியவை இராவணனுக்கு உண்மையாய் நிகழலாம் எனப்பட்டன. ஆகவே, அழுதான். கும்பகருணனோடு இன்னும் பற்பலர் அழிந்தனரேனும், இராவணன் தன் பலத்தில் கொண்டிருந்த நம்பிக்கையைப் போலவே, தன் மகனுடைய வல்லமையிலும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தான், மகன் பகைவரை நாகபாசத்தால் கட்டிவிட்டு வந்தது இராவணனுடைய நம்பிக்கையை மிகுதிப்படுத்தியது. ஆகவேதான், இந்திரசித்தனை முழு வன்மையுடன் போர் செய்யுமாறு துரண்டுவதற்கு இராவணன் அவனைக் கடிந்து அனுப்பினான். கும்பகருணனை நடத்தியது போலவே தன் மகனையும் இராவணன் நடத்தியது, அவனுக்கு மனித