206 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் உணர்ச்சி அறவே அகன்றுவிட்டது என்பதையே வெளிப்படுத்திக் காட்டுகிறது. தன் அறிவையே பொருட்படுத்தாதவனுக்கு மனிதவுணர்ச்சி எவ்வாறு இருக்கக்கூடும்? சீதை தன்னைக் காதலிக்க வேண்டும் என்று விரும்பிய இராவணன், அவளை அவ்வாறு செய்யத் துரண்ட, பிரமாத்திரத்தால் கட்டுண்டு கிடந்த இலக்குவனையும், அவனைக் கண்டு ஏங்கியிருந்த இராமனையும் காண அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டது, அவனுக்கு மனித உணர்ச்சி முற்றிலும் இல்லை என்பதையே வற்புறுத்துகின்றது. அனுபவ அறிவையே புறக்கணித்து அழிவை நாடி நாலாம் படியில் காலை வைத்த இராவணன், அதற்குப் பின் ஒருவர் பின் ஒருவராகத் தனக்குத் துணையாயிருந்தவரையெல்லாம் இழந்தான். சீதையைக் காதலித்தபொழுதே இராவணன் நேர்மையை இழந்தான்; அவளை வஞ்சித்துக் கவர்ந்த பொழுது அழிவைத் தேடிக்கொண்டான்; வீடணனை நன்கு அறிந்தும் பகைவரைச் சேரவிட்டதால், அரசிய லறிவை இழந்தான்; உற்பாதங்களைப் புறக்கணித் ததால், முழு அறிவிலியாய் மாறினான். கும்பகருணன், சீதை, இந்திரசித்தன் முதலியோரிடத்து நடந்து கொண்ட முறையால் அவன் மனிதவுணர்ச்சியையே இழந்துவிட்டிருந்தான் என்பதை அறிகிறோம். இனியும் அவன் இழப்பதற்கு என்ன இருக்கிறது! அவன் ஒருவனே இருக்கிறான்! - 5. கலைஞன் வீழ்ச்சி மூவுலகங்களும் புகழ்ந்து போற்றும் உயர்ந்த நிலையினின்றும் வீழ்ந்து அரக்கிமார் பழிக்கும்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/223
Appearance