உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் வீழ்ச்சி 207 தாழ்வை இராவணன் எய்தியதற்கு அடிப்படைக் காரணங்களாய் அமைந்தவை அவனுடைய காமமும் செருக்கும் ஆம், கும்பகருணன் அதிகாயன் முதலியோரை இழந்த பின்னரும், இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைக்கூட அவனால் விட முடியவில்லை. மேகநாதன் இறந்தது இராவணனுக்கு ஒரு பேரிழவு. இஃது அவனுக்குத் தந்த வருத்தம் அளவிட்டுக் கூறும் தன்மையுடையதன்று. இத்தகைய துன்பத்தை அடைந்த பின்னரே இராவணனுக்குத் தன்னுடைய தவறுகள் தெரியத் தொடங்கின. சினத்தொடும் கொற்றம் முற்றி இந்திரன் செல்வம் மேவி நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால் எனக்குநீ செய்யத் தக்க கடனெலாம் ஏங்கி ஏங்கி உனக்குநான் செய்வ தானேன்; என்னின்யார் உலகத் துள்ளார்! (கம்பன் - 9224) தான் பட்ட துன்பங்களுக்கு உண்மையான காரணம் சீதையின்மாட்டுக் கொண்ட காமமே என்பதை இராவணன் நன்குணர்ந்தான். இதனை மண்டோதரியும் சுட்டிக்காட்டவே, அவன் கோபம் மிகப் பெற்றவனாய்ச் சீதையைக் கொல்ல ஓடினான். மகனைப் பலி தந்து தன் இழிவுகட்கெல்லாம் அடிப்படைக் காரணத்தை அறிந்துகொண்டானே யொழிய, இன்னும் இழந்த தன் அறிவை அவன் முற்றிலும் திரும்பப் பெறவில்லை என்பதையே இச் செயல் தெரிவிக்கிறது. அவன் காம மயக்கத்தால் அல்லன செய்தால் அதற்குச் சீதையா பொறுப்பாளி? மகனை இழந்ததால் ஏற்பட்ட மிக்க வருத்தங் காரணமாக இராவணன் சீதையைக்கொல்லச் இ.மா.வீ.-15