பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் வீழ்ச்சி 209 சீதையைக் கொல்லக் கூடாது என்பதற்குக் காட்டிய காரணங்களுள் மூன்றாவது காமத்தைப்பற்றியதே. ஆகவே, இராவணனைப் பிடித்திருந்த காம மயக்கம் முற்றிலும் நீங்காவிட்டாலும், ஒரளவு - பெரும்பகுதி - இல்லையாகிவிட்டது எனக் கூறலாம் ஆனால், அவனுடைய செருக்கு மேகநாதனை இழந்த பின்னும், இம்மியளவுங் குறையவில்லை. நீ ஏன் இதுவரை போருக்குச் செல்லாமல் கும்பகருணன் முதலியோரை இறக்கவிட்டாய்? என்ற கேள்விக்கு இராவணன், 'நாணத்தால் அவ்வாறிருந்தேன்' என்று கூறியதோடு அமையாமல், 'நானும் அவனும் சம பலமுள்ள எதிரிகள் என்றால், இனி என் முறையை ஏற்றுக்கொள் கிறேன் என்றான். இப்பொழுதும் அவன் பகைவரைத் துச்சமாக மதிக்கும் குணத்தை விடவில்லை. இதனால், இராவணன் அழிவுக்குக் காம மயக்கம் மட்டுமே காரணமாகாது; அவன் தன்னம்பிக்கையும் தற்பெருமையும் சேர்ந்து துண்டிய செருக்கே காரண மாகும் என அறிகிறோம். - வீடணனும் மாலிய வானும், 'பெரும்போர் நிகழும் எனக் கூறியும், அதைஏற்றுக் கொள்ள மறுத்த இராவணன், இப்பொழுது மேகநாதனை இழந்ததால், தான் ஈடுபட்டிருப்பது மிகப்பெரிய போரே என்பதை உணர்ந்துகொண்டான்; முன்னர்ப் பெண்களை அழைத்துக்கொண்டு சேனையைக் கானச் சென்றவன், இப்பொழுது, பொழுதுபோக்காகக் கருதாமல், போரில் விருப்பமுள்ளவனாய்ப் படை களைக் காணச் செல்லுகிறான்; படைத் தலைவரைத் தருவித்து அவர்களுடன் கலந்தாலோசிக்கிறான்; அதுவரை புறக்கணித்திருந்த பூசனை முதலியவற்றை