கலைஞன் வீழ்ச்சி 213 பூசையை இராவணன் இறுதி பூசையாகக் கருதினான். தோல்வியை நினைத்தும், இராவணன் வருந்தக் காரணமில்லை. பகைவனை எதிர்த்து நின்றே இறப்பானாகையால், தன் கடமையைச் செய்துவிட்ட வனாகவே அவன் கருதப்படுவான். தன்னை வெற்றி கொண்ட இராகவனை உலகத்தார் என்றும் பாராட்டு வார்களாகையால், தன்னையும் தாழ்த்திப் பேசார்களல்லவா? இராவணன் பண்பை முழுதும் உற்று நோக்கு பவர்க்கு இவ்வுண்மை விளங்காமற்போகாது. அவனுடைய வாழ்வைப் பொதுவாக நோக்கினால், அவன் ஒரு கலைஞன் என்பதை நன்கு உணர இயலும். அழகு, இன்பம் என்ற இரண்டிற்காக எவற்றையும் தியாகம் செய்யும் பண்பு கலைஞன் ஒருவனிடமே காணப்படும். இவ்வுண்மைக்குச் சான்று தேட அதிக முயற்சி தேவை இல்லை. நந்தித் தொண்டைமான் கலைஞனாய் இருந்த ஒரே காரணத்தாலேதான், கலம்பகத்தைக் கேட்பது தனக்கே அழிவைத் தேடிக் கொள்வதாகும் என்று அறிந்திருந்தும், அதனைக் கேட்டு முடித்து உயிரை விட்டான். இன்பத்திலும் துன்பத்திலும் கலைஞர் சுவையையே விரும்புவர். சுவையின் பொருட்டுத் துன்பத்தையும் விலைக்குப் பெறுவர். வாழ்க்கையில் நடைபெறும் எல்லாச் செயல் களிலும், கலைஞன் தனக்கே உரிய தனி முறையில் ஒரு சுவையைக் காண்கிறான். வாழ்க்கையில் - அதிலும் தன்னுடைய வாழ்க்கையில் - நடைபெறும் பேரின்னலிற்கூட ஒரு சுவையைக் காணக் கலைஞனை யன்றி வேறுயாருக்குத்தான் இயலும்! இதோ இராவணனாம் கலைஞனைக் காண்போம்.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/230
Appearance