பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இராவணன் இராமன் அம்பால் துன்புற்று, வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புகுந்து விட்டான்; பாட்டனிடம் போரின் தன்மையை விவரிக்கிறான்; இராமனுடைய அம்புகளை நினைவு கூர்கிறான். எவ்வாறு? தன் உயிர் பருக வரும் கூற்றமாகிய அம்பை இராவணன் எவ்வாறு காண்கிறான்? நல்லியல் கவிஞர் நாவில் பொருள்குறித்து அமர்ந்த நாமச் சொல்லெனச் செய்யுட் கொண்ட தொடையெனத் தொடையை நீக்கி எல்லையில் செல்வந் தீரா இசையெனப் பழுதிலாத பல்லலங் காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ. (கம்பன் - 7293) தன் உயிரைப் பருக வரும் பகைவன் அம்பைக் கவிதையாக உருவகப்படுத்திக் காண யாருக்கு இயலும்? கலைஞன் ஒருவனுக்கே இயலும். சுவையின் பொருட்டு எதனையும் மேற்கொள்ளும் இயல்பை ஈண்டு நன்கு காண்கிறோம். கலைஞனுக்கே ஏற்ற முறையில் இப்பொழுது போரை மேற்கொள்கிறான் இராவணன். பழி ஒன்றுக்கு மட்டும் அஞ்சும் இயல்பு கலைஞனுக்கு உண்டு. சீதையை மறந்துவிட்டாலும், இராவணன் பழி வாராமல் காக்கப் போர்புரியத் தொடங்குகிறான். இக் கருத்தை அவனே கூறுகிறான். மைந்தன் மேகநாதனை நோக்கி அவன்கூறும் வார்த்தைகள் ஆராயத்தக்கன. . வென்றிலேன் என்ற போதும் வேதம்.உள் ளளவும் யானும் நின்றுளேன் அன்றோ மற்று.அவ் விராமன்பேர் நிற்குமாயின் ? பொன்றுதல் ஒருகாலத்துந் தவிருமோ? பொதுமைத்து . . அன்றோ ? இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ?