216 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அவ்வெண்ணமும் ஓரளவு சிதைந்தது. காமம் அடியோடு அழிந்தது. தன்னால் இதுகாறும் காதலிக்கப்பட்டவள் இன்று வயிற்றில் அடித்தபடி துன்பக் கடலில் ஆழ வேண்டும்! என்று சபதம் செய்பவனுக்குக் காமம் எங்கு இருக்கக்கூடும்? தன் வெற்றியை முதலிற்குறிப்பிட்டுவிட்டு, பின்னர் அவ்வாறு நிகழாமற்போனால் தான் அழிந்து விடுவது திண்ணம் என்று குறிப்பிடுபவனுக்கு, வெற்றி தன்னுடையதே என்ற உறுதி எவ்வாறு இருக்கும்? உறுதி இல்லையேயொழிய, தான் வெற்றி பெறுதலுங் கூடும் என்ற எண்ணம் அவன் மனத்தில் இல்லாமல் இல்லை. கடும்போர் நடந்தது. இராவணன் தன்னிடத் திருந்த வல்லமை மிக்க படைக் கலங்களையெல்லாம் பயன்படுத்தினான். ஆனால், அவற்றால் இராகவனைத் துன்புறுத்த முடியவில்லை. இறுதியாகத் தனக்குத் தேவரனைவரையும் வெற்றி கொள்ள உதவிய சூலத்தை இராவணன் எறிந்தான். அதவும் இராமனை ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. இதைக் கண்ணுற்ற பிறகே, இராவணனுக்குத் தான் அழிவது நிச்சயம் என்ற எண்ணம் தோன்றிற்று. சிவனோ அல்லன் நான்முகன் அல்லன்; திருமாலாம் அவனோ அல்லன், மெய்வர மெல்லாம் அடுகின்றான் தவனோ என்னில் செய்து முடிக்கும் தரனல்லன்; இவனோ தானவ் வேதமு தற்கா ரணன் ?என்பான் ! (கம்பன் - 9837) என்ற இவ்வெண்ணம் இராவணனைத் திகைப் படையச் செய்தது. போரைத் தொடர்ந்து நடத்துவதா, வேண்டாவா என்ற எண்ணம் மின்னலைப் போல்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/233
Appearance