கலைஞன் வீழ்ச்சி ; 217 அவன் மனத்தில் தோன்றிற்று. ஆனால், அவன் அதைப்பற்றி சிந்திக்க மறுத்து விட்டான். யாரே னுந்தா னாகுக யானென் தனியாண்மை பேரேன்; நின்றே வென்றி முடிப்பன்; புகழ்பெற்றேன் ! (கம்பன் - 9838) என்ற உறுதியுடன் போரைத் தொடர்ந்தான். இங்கு இராவணன் கூறுவது போரில் வெற்றியன்று; தன் மனத்தை - மனித மனத்தை - வெல்லும் வெற்றி. போரில் வெற்றி கிடைக்காது என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. முழுமுதற்பொருளோடு மாறுபடக் கூடாது' என்று உயர்ந்த நோக்கத்துடன் அவன் போரை நிறுத்தியிருந்தாலுங்கூட, உலகம் அவன் உயிருக்குப் பயந்து, பின் வாங்கியதாகவே கூறும். இப்பழியை வெற்றி கொண்டேன்; புகழைப் பெற்றேன்! என்றே இராவணன் எக்களிக்கிறான். எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. குறள், 46) என்ற பொய்யாமொழியை வேறு யார் இவ்வளவு நன்றாகக் கடைபிடிக்கக் கூடும்? பகைவன் வேத முதற்காரணன் என்று எண்ணாமல் இராவணன் செயலில் இறங்கிவிட்டான். அதற்காகச் செயலை இடையே நிறுத்துவதா? முடிவு என்னவாக இருக்கும் என்பதைப்பற்றி இராவணனே கவலைப்படாதிருக்கையில், நாம் ஏன் ஏங்க வேண்டும்? - உம்பரும் பிறரும் போற்ற ஒருவனாய் மூவுலகாண்ட இராவணன், மாண்டு தரையில்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/234
Appearance