பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் யாராவது நினைத்தால், அவனது சினந்தான் முன்னர் நினைவிற்கு வரும். ஆகவே, இராவணன் வீழ்ந்தான் என்று சொல்ல வந்த ஆசிரியனுடைய மனத்தில் அவனது சினந்தான் தோன்றுகிறது. 'இராவணன் வீழ்ந்தது வியப்பன்று; அவன் சினமும் வீழ்ந்ததோ? என வினவுவார்க்கு விடை தருவது போல ஆசிரியன் முன்னர் அதனைக் கூறினான்; அதினும் வீழ்தல், ஒழிதல் முதலிய பல சொற்கள் இருக்க, 'அடங்க என்று சொல்லை ஆள்கிறான். அச் சினம் சிறிது சிறிதாக ஒழிவதற்கு மறுத்து இறுதியில் இறங்கி இறங்கி ஒடுங்கிற்று என்ற கருத்தில் அடங்க' என்றான். மேலும், அச் சினத்திற்கு உவமை தருவான் வேண்டி மிருகேந்திரனது சினத்தை உவமித்தான். அதிலும் சினங்கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் எத்தகைய கோபத்தை மடங்கல் கைக்கொள்ளுமோ, அத்தகைய சினத்தை ஆசிரியன் உவமை கூறியிருக்கின்றான். இனி அடுத்து வருவது, மனமடங்க என்பதாகும். சினத்தின் பின்னர் இதனை வைத்த கலைஞனது நுட்பமே நுட்பம்! சினம் என்பது ஓர் உணர்ச்சி. ஆனால், மனமென்பது உணர்ச்சிகளெல்லாம் தோன்றும் நிலைக்களனாயுள்ளது. ஆகவே சினந்தான் அடங்கிற்று? அச்சினந் தோன்றற்குரிய நிலைக்கள னான மனம் என்னவாயிற்று? என்பார்க்கு விடை யிறுப்பான்போல அம் மனமும் செயலின்றி அடங்கிற்று என்றான். முன்னர்க் கூறிய 'அடங்க என்ற சொல்லுக்கும் இப்பொழுது கூறும் அடங்க என்ற சொல்லுக்கும் அவலச் சுவையில் மிகுதிப்பாடு இருப்பதைக் காணலாம். இது பின்னர் வருஞ் சொற் களுக்கும் ஒக்கும். -