கலைஞன் வீழ்ச்சி 221 மூன்றாவது வருவது தெம்மடங்கப் பொரு தடக்கைச் செயல் அடங்க' என்பதாகும். பகைவர் அழியும்படி பொருத நீண்ட கைகளும் செயலொடுங்க என்பது இவ்வடியின் பொருள். தெவ் மடங்க என்பது தெம்மடங்க' எனப்புணர்ந்தது. இங்குப் பகைவர் அழியப் பொருத கை என்பது பொருள். இராவணனது தடக்கையின் ஆற்றலைக் கண்ட தெவ்வர் தாமே அழிந்தனர் என்பதைக் காட்டவே ஆசிரியன், மடங்க' என்றான். அத்தகைய தடக்கை 'செயலடங்க' என்றான். இறந்த ஒருவன் கை செயலடங்கிற்று என்று கூறுதல் இன்றியமையாததோ? எனினும், மிக நுட்பமாகக் கலைஞன் வேண்டுமென்றே இங்ங்னம் கூறுகிறான். வாணாள் முழுதும் போரே செய்து வாழ்ந்த இராவணனை ஒத்த பெருவீரனுக்கு வாளோச்சுதல் முதலிய கைச் செயல் பழக்கத்தால் படிந்துவிட்டன (Reflex action) ஆகவே, அவன் தலை அறுபட்ட காலத்திலும் கைகள் தாமே போர் செய்திருத்தல் கூடும். இங்ங்னம் தலை அறுபட்ட முண்டங்கள் போர் செய்வதைப் பரணி நூல்களிற் காணலாம். இற்றைநாட் போரிலுங்கூட இத்தகைய செயல்கள் ஒரோவழி நிகழ்வதைக் கேட்கலாம். ஆகவே, இராவணன் இறந்தான்; 'அவன் கைகள் - வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு அள்ளி விண் தொட எடுத்த அந்தக் கைகள் - அவைகளுமா தொழிலற்றன!" எனத்தோன்றும் வியப்பின் வினாவிற்கு, 'ஆம்! அவைகளுங்கூடப் போயின என்பான் போன்று கைகளினுடைய செயல்களும் அடங்கின என்றான். - - இவையெல்லாம். அடங்கினது ஒருபுறம் இருக்க 'மீதெழும் மொக்குளன்ன யாக்கையை விடுவதல்லால்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/238
Appearance