கலைஞன் வீழ்ச்சி 223 முனிவர் என்று கூறினான். அங்ங்ணம் அடங்கின முனிவரை உடல் வன்மையால் வெல்லுதல் ஒல்லாதன்றோ? அவரையும் தலை வணங்கித் தருக்குத் தாழ்ந்து நிலை குன்றச் செய்தவன் என்று கூறும் முகத்தால், அவன் ஆன்ம முன்னேற்றத்தையுங் கூறினானென்க. - இறுதியாக உள்ள அடி மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா என்பதாகும். இஃதென்ன விந்தை' உயிர்துறந்த முகங்கள் பொலிவுறுதல் கூடுமோ? சிறிது சிந்தித்துப் பார்க்கவேண்டிய இடம். கலைஞன் வீழ்ந்து கிடக்கும் இராவணனைக் கற்பனைக் கண்ணால் காண்கிறான்; அவனது பழைமையை நினைந்து மீண்டும் அம்முகத்தை நோக்குகிறான்; இடைக்காலத்து இராவணனது முகத்தை நினைவுகூர்கிறான். உண்மை விளங்குகிறது. மும்மடங்கு பொலிந்திருப்பதாகக் காண்கிறான்; நம்மையும் காணுமாறு செய்கிறான். மனத் தத்துவம் நன்குணர்ந்தவன் கலைஞன். மனத்தின் கண் நிரம்பியுள்ள உணர்ச்சிகள் முகத்தில் வெளிப் 1. டாது. போவதற்கில்லை. 'முயன்றுடைய பெருந்தவமும்', 'உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும்', 'நாரத முனிவர்க்கேற்ப நயம்படப் பாடும்' வன்மையும், ‘என்னையே நோக்கி நான் இந் நெடும் பகை தேடிக் கொண்டேன்! என்று சொல்லும் இமயத்தை ஒத்த தன்னம்பிக்கையும், இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ? என்று கூறும் மெய்யுணர்வும் பெற்ற ஒருவன் முகங்கள் பொலிவு பெற்றிருந்தனவெனக் கூறவும் வேண்டுமோ இது பழைய இராவணனது தோற்றம்; இதை ஒரு முறை காண்கிறான் கவிஞன்.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/240
Appearance