224 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இராவணன் இடைக்காலத்தே 'மயிலிளஞ் சாயலாளை வஞ்சியா முன்னம் இதயமாம் சிறையில் வைத்தான்? அன்றோ? வேறொருவன் மனைவியை நயந்து சிறை வைத்த ஒருவன் களங்கமுடையவன் அல்லனோ? பிறர்மனை நயத்தலாகிய தவறு செய்த அவன் மனத்தில் மாசு படிதல் இயல்பன்றோ? ஆகவே, அவனது பொலிவையெல்லாம் மறைத்தது இம்மாசு. இனிப் போர் செய்கின்ற காலத்துச் சீதையை அறவே மறக்க நேரிட்டதன்றோ? மேலும், இராமனுடைய அம்பு, கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உட்புகுந்து தடவி அம் மாசை முற்றும் நீக்கிவிட்ட தல்லவா? ஆகவே, இப்பொழுது அம்மாசு முற்றும் நீங்கி விட்டது. மேலும், சுத்த வீரனான இராவணன் போர்க் களத்தில் இறுதி வரையில் போரிட்டு மாண்டிருக் கின்றான். எனவே, பழைய பொலிவிற்குக் காரணமா யிருந்த வீரம், தவம் முதலியன வெல்லாம் மீண்டும் அவன் முகத்தில் பொலிவைத் தரலாயின. அது ஒரு மடங்கு பொலிவாயிற்று. - 'மும்மடங்கு பொலிந்தன என்று கூறினமைக்கும் ஆசிரியன் காரணம் காட்டுகிறான். இத்துணைப் பேராற்றலிருந்தும், ஆணவம் என்ற மாயையால் மூடப் பட்ட இராவணன், மெய்யுணர்வு அற்றவனாய் இருந்தான். போரின் இறுதியில் பகைவனைச் சூலமும் ஒன்றும் செய்யவில்லை என்பதுணர்ந்த இராவ ணனுக்கு மெய்யுணர்வு ஒரு சிறிது தோன்றுகிறது. வாழ்வில் முதல் முறையாக இவனோதான் அவ் வேத முதற்காரணன்? என்று நினைக்கின்றான். இம்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/241
Appearance