முடிவுரை 225 மெய்யுணர்வு காரணமாக இருமடங்கு பொலிவு ஏற்பட்டது. போரென்று மூண்ட பின்னர் பகைவன் கடவுளேயாயினும், எண்ணித் துணிந்த கருமத்தை இட்ையேவிட்டு உயிருக்கஞ்சி மீளல் பேடியர் செயலாகும். எனவே, இராவணன் இவ்வுணர்வு தோன்றிய பின்னரும், யாரேனுந் தானாகுக, யான் என் தனியாண்மை பேரேன்; நின்றேன்; வென்று முடிப்பேன்; புகழ் பெற்றேன்: என்று இறுதிவரையில் போரிட முயல்கிறான். இனி நடைபெறும் போர் சீதை யின் பொருட்டன்று கடமையின் பொருட்டு. தான் இறப்பது உறுதி என்பது தெரிந்த பின்னரும் புகழ் நிறுத்துவான் வேண்டிச் செய்கின்றதாகலின் கடமை யைச் செலுத்தும் ஒப்பற்ற வீரனுடைய முகத்தில் தோன்றும் ஒரு பொலிவு தோன்றலாயிற்று. எனவே, மும்மடங்கு பொலிந்தனவென்ற ஆசிரியன், அவ்வாறு பொலிவதற்குரிய காரணத் தையும் ஆய்ந்தறிவார் அறியுமாறு கூறினமை கண்டு மகிழ்தற்குரியது. , * 6. முடிவுரை முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் 'ளக்கோடி யாராலும் வெலப்படாய்' எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறம்போயிற்று இராகவன்தன் புனித வாளி ? - - - (கம்பன் - 9899)
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/242
Appearance