பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இராவணன் மாண்டதற்காகக் கவிஞன் பெரிதும் வருந்துகிறான். உலகில் எவருக்கும் கிடைத்தற்கரிய டேறுகளை இராவணன் பெற்றிருந்தான். அதனால், மக்களுக்கு முயற்சியால் அடையக்கூடிய மேன்மைக்கு ஒர் எடுத்துக்காட்டாய் அவன் விளங்கினான். இத்தகையவன், மனிதர்களுக்குள்ளே மிக மேம்பட்டவன், தேவர்களும் அஞ்சி ஒடுங்கித் தொழில் புரிந்த பெருமையையுடையவன், அறிவும் கலையுணர்ச்சியும் சிறக்கப்பெற்றவன் இறந்துபடுவது உலகத்தின் இழவே அன்றோ? மனித சமூகம் தன் சிறந்த பிரதிநிதியை இழந்து விட்டதற்காகக் கவிஞன் ஏங்குகிறான். கவிஞன் இவ்வாறு தன் மனத்தைத் தெரிவிப்ப திலிருந்தே, இராவணன் அழிவுக்கு அவன் தீய செயல்களே காரணம் என்ற கொள்கையில் அவனுக்குப் பலமான பிடிப்பில்லை என்பது விளங்கு கின்றது. நல்வழியில் நாட்டை ஆண்டு இன்பமாய் வாழ்ந்திருந்தவனைச் சூர்ப்பனகை தன் மன வேட்கையை நிறைவேற்றிக்கொள்ளத் தவறான வழியிற் செல்லத் துரண்டினாள். இராவணன் பெண் இன்பத்துக்கு இடமளித்த குற்றச்சாட்டுக்கு முழுப் பொறுப்பாளியாவானேயொழிய, அவன் பிறன் மனையாளை வஞ்சன்ையாற் கவர்வதற்கு வழி தெரியாதவனாகவே இருந்தான். சூர்ப்பணகையின் துர்ப்போதனையினாலேதான் சீதையை அவன் வஞ்சித்துக் கொணரச் சூழ்ச்சி செய்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. நல்லார் எவரும் முதன் முதலாகப் பிழை செய்யப் புகும்போது நடுநடுங்குவர். ஆனால்,