முடிவுரை 227 ஒருமுறை தவறு செய்தபின் தொடர்ந்து குற்றஞ்செய்ய அவர்களுக்கே தைரியம் ஏற்பட்டுவிடும். மீண்டும், அவர்கள் குற்றத்துக்கு நாண வேண்டுமேயானால், அவர்கள் செய்த பிழையைப் பன்மடங்கு பெருக்கிக் கட்டி, அதனால் சேராத பழி சேர்ந்துவிட்டதை உணர்த்தி, அத்தகைய செயல்களால் பெறக்கூடிய பயன்கள் பெரியனவல்ல என்பதையும் தெரிய வுைக்க வேண்டும். வீடணன் இம்முறையில் இராவணன் மனநிலையை மாற்ற முயன்றான். ஆனால், அவன் வெற்றி பெறாததன் முழுப் பொறுப்பையும் இராவணனையே ஏற்கச் சொல்வது பொருந்தாது. கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்என்று அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழ்.அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப் பழிதீர்ந் தாளே! - (கம்பன் - 9926) சூர்ப்பணகை அண்ணனிடம் தெரிவிப்பதைப் போல, அவன் இன்பமடைவதில் விருப்பம் கொண்டு அவனைச் செயல் புரியத் தூண்டவில்ல்ை என்பது வீடணனுக்கு நன்கு தெரியும் என்பதை இதனால், அறிகிறோம். ஏன் தானறிந்த இவ்வுண்மையை வீடணன் இராவணனுக்கு தெரிவிக்கவேயில்லை? இராவணனுக்குச் சீதையை எடுத்து வந்தது தவறு என்று எடுத்துக் கூறியவர் யாரும், சூர்ப்பணகையைப் போல அவனை இன்பமடையச் செய்ய முயன்றதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஏனெனில், சூர்ப்பண்கை, அண்ணனைக் கேளாமலே, அவன் இன்பத்தை வேண்டித் தன் மூக்கை இழந்ததாக விளம்பரப்படுத்திவிட்டாள். தன் நன்மையை விரும்பி
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/244
Appearance