228 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் மூக்கையிழந்தவள் முன் இருக்க, இராவணனுக்காக ஒன்றையும் இழக்க முன் வாராதவராய், அவனும் தாமும் ஒன்றையும் இழக்காமலிருக்க உறுதி சொல்லுபவர் பேச்சை அவன் ஏற்றுக் கொள்ளாதது மனித இயற்கைதானே! பின்னர்க் கும்பகருணன், மேகநாதன் முதலியோர் இறந்த பின்பும் இராவணன் அவர்கள் வற்புறுத்தியபடிதான் செய்தது பிழையே என உணராததற்குக் காரணம். அவன் வேண்டிய காலங்களில் அவர்கள் மறுத்துக் கூறாமல் அவன் கட்டளைகளை நிறைவேற்றியதே. இவற்றால், இவர் அனைவரும் முழுமனத்துடன் தன் நன்மையை நாடவில்லை என்றும், தனக்குப் பயந்தே போருக்குச் சென்றனர் என்றும் இராவணன் எண்ணிக் கொண்டான். வீடணன், கும்பகருணன் முதலியவர்களால் செய்ய முடியாததை மகோதரன் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவனாய்க் காண்கிறான். இரு முறை மகோதரன் கூறிய நெறியை இராவணன் ஏற்றுக் கொண்டான். இதனால், பிறர் பேச்சுக்குத் - தன் மந்திரக் கிழவர் ஆலோசனைகளுக்கு - இராவணன் மதிப்பளித்தான் என்பது நன்றாய் உணர முடிகிறது. முதற்போருக்குப் பின் மனம் தளர்ந்திருந்த இராவணனை, வெற்றியும் தோல்வியும் போரின் இயற்கை; தோல்வியைக் கண்டு தளர்வடைவது தோல்வியேயொழிய, தோல்விகள் உண்மையில் வெற்றியின் சூசனைகளே என்றும், சீதையை அபகரித்து வந்தபின் அதற்காக எழுந்த போரைக் கண்டு சீதையைத் திருப்பியனுப்புதல் இராவணன் பெருமைக்கு ஏலாதது என்றும் எடுத்துக் காட்டினான்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/245
Appearance