6 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் கீழ்ப்படிந்தே நடக்கிறான். ஆனால், இங்கு விதி என்று கூறப்படுவது நம்மினும் உயர்ந்துள்ள ஒரு பொருள் வழங்கும் நீதியாகும். அந்நீதி நாம் தகுதியானது என்று நினைக்கும் வழியே செல்வதில்லை. நமது சிற்றறிவுக்கு எட்டாத முறையில் அது தனது நியாயத்தை நடத்திச் செல்கிறது. தனிப்பட்ட மனிதன் கற்பனைக்கு அடங்காத முறையில் தனது ஆணையை அது செலுத்துகிறது. ஆனால், காப்பியத்தில் பெரும்பாலும் சோகத்தின் நிழல் படர்ந்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே காப்பியம் இயற்றப்படுகிறது. மேலே கூறிய கருத்துகளை மனத்தில் கொண்டு, இராமாயணத்தைக் காணவேண்டும். அங்ங்னம் காணும்பொழுது அஃது ஒரு வழிநூல் என்பதனையும் மறந்துவிடலாகாது. தனியாகத் தானே காப்பியம் இயற்றுகிறவனுக்கு உள்ள உரிமை வழிநூல் செய்கிறவனுக்கு இல்லை. அவன் விருப்பம்போல் கவிதை புனைவதற்குச் சில தடைகளும் அங்கு ஏற்படுகின்றன. இவையனைத்தும் இருந்தும், இராமாயணம் ஓர் ஒப்பற்ற தமிழ்க் காப்பியமாக இருந்து வருகிறது. கம்பராமாயணத்துச் சிறப்புகளை எடுத்துப் பேச இஃது இடமன்று. அக் காப்பியம் பெற்ற தலைவர்கள் இருவர். ஒருவன் இராமன்; மற்றவன் இராவணன். இரண்டாமவனாக உள்ள தலைவனின் மாட்சியும் வீழ்ச்சியுமே நாம் காண எடுத்துக்கொண்ட பொருளாகும். இலங்கை வேந்தனாகிய இராவணனை வால்மீகி கண்ட விதம் வேறு; கம்பநாடன் காட்டுகிற விதம் வேறு. கம்பன் கூறும் கோசலம் எப்படி ஒரு கனவு
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/25
Appearance