8 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இவ்வாறில்லாமல் சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் அதன் ஆசிரியர் காலத்திலேயே சம்பவம் நடந்ததாகலின், சரித்திரபூர்வமான உண்மைகள் பலவற்றை அங்கே பெற முடியும், கலைஞனாக ஆக்கிக் கொள்ளும் அக் கலையின் வெளிப்பாட்டிற்கு அவனே சட்ட திட்டங்களையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அக்கட்டுப்பாட்டை மீறிச் செல்லாத வரையில் நாம் அவனைக் குறை கூற வேண்டிய தில்லை. இராவணன் என்றொருவன் வாழ்ந்தானா? அவ்வாறாயின் எப்பொழுது? அவன் இச் செயலைச் செய்தானா? அவன் தமிழனா? ஆரியனா? இக் கேள்விகள் அனாவசியமாகும். இவற்றிற்கு விடை வேண்டுமானால் கம்பராமாயணத்திற் சென்று தேட வேண்டா, இவ்வுண்மைகளை ஆராயப் பழைய சரித்திரத்தைத் தேடவேண்டுமே தவிர, இலக்கியத்தைத் தேடிப் பயனில்லை. கம்பராமாயணத்தில் உள்ள இராமனும் இராவணனும், ஏன்? அனைவருமே கம்பன் பெற்ற பிள்ளைகள். அவர்களின் ஆக்கமும் வீழ்ச்சியும் அவனுடைய கற்பனையே தவிர வேறு ஒன்றும் இல்லை. 'இங்ங்னம் ஒருவன் செய்ய முடியுமா? இஃது அறமா? என்ற வினாக்களுக்கு அங்கு இடமில்லை. அவன் பெற்ற பிள்ளைகளை அவன் என்ன கருத்தோடு செயல் செய்யுமாறு செய்கிறான் என்றுதான் காணவேண்டும். நமது விருப்பு வெறுப்புகளை அப் பாத்திரங்கள் மீது ஏற்றிக் காண்டல் பொருத்தமுடையதாகாது. கம்பன் பெற்ற இராவணன் இருந்த மாட்சி யையும், அவன் அடைந்த வீழ்ச்சியையும் கம்பனே
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/27
Appearance