10 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் 91s.Isolb (TRAGEDY) அவலம் என்பது வாழ்க்கையிலும் இலக்கியத் திலும் இடம் பெறும் ஒரு சுவையாகும். அவலத்திற்கும் அழுகைக்கும் வேற்றுமை நிரம்ப உண்டு என்பதை நினைவில் இருத்த வேண்டும். அவலத்தின் முடிவு அழுகையாகவும் இருக்கலாம். ஆனால், அழுகையில் மட்டும் முடிந்தால் அஃது அவலமாக ஆகாது. அழுகையைவிடச் சிறப்பாக வியப்புச் சுவை ஆண்டுக் கான்னப்படும். அவலத் தலைவன் அடைகின்ற ஒவ்வொரு துன்பமும், நம்மாட்டு அச்சத்தோடு கூடிய ஒரு வியப்பை உண்டாக்குகிறது. ஆனால், வாழ்க்கையில் உண்டாகும் அவலத்திற்கும் இலக்கியத்தில் காணப்படும் அவலத்திற்கும் வேற்றுமை உண்டு. வாழ்க்கையில் அவலத்தை யாரும் விரும்ப மாட்டார்கள்; ஆனால், இலக்கியத்தில் அவலச் சுவை பெரிதும் விரும்பப்படும். அவலத் தலைவன்படும் துன்பங்களில் எல்லாம் நாமும் பங்கு கொள்கிறோம். எனினும், அத்துன்பத்தில் பங்கு கொள்வதில் ஒருவித இன்பம் அடைகிறோம். ஆனால், அவ்வின்பம் பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையும் அற்பர்களது இன்பம் அன்று. ஆழ்ந்த துக்கத்தில் தோன்றும் இன்பமேயாகும். இலக்கியத்தில் காணப்படும் அவலம்பற்றி ஆராய்ந்து அரிய முடிவுகளைத் தந்த பெரியார்கள் இருவர். ஒருவர் 'அரிஸ்தாத்தில் மற்றொருவர் 'ஹேகல் என்ற பெரியார். அப்பெரியார்கள் முடிபுகள் அனைத்தும் நம்மால் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அன்றெனினும், அவற்றில் பெரும்பாலானவை
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/29
Appearance