12 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தனிப்பட்ட மக்கள் அனுபவிக்கும் துன்பமெல்லாம் அவலம் என்றே கூறப்படல் வேண்டும். அவ்வாறில்லை ஆதலானும், அத்துன்பம் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தது ஆதலானும் அதனை அவலம் என்று கூறல் இயலாது. முரண்பாட்டின் விளைவாக நிகழ்கின்ற போரே துன்பத்திற்குக் காரணமாக இருப்பதாதலின் அப்போரே சிறப்புடையது. அச்செயல் பற்றி விளையும் அச்சம் முதலிய உணர்வு களே சிறப்புடையவை. சாதாரணத் துன்பத்தைக் கண்டும் இரக்கம் கொள்கிறோம். வறுமை முதலிய வற்றால் துன்பம் நேரிடுகையிலும் இரக்கம் கொள் கிறோம். ஆனால், இவ்விரக்கத்திற்கும் அவலத்தால் ஏற்படும் இரக்கத்திற்கும் வேற்றுமை உண்டு. மேலே கூறிய சாதாரணத் துன்பங்களைக் காணும் பொழுது உண்டாகும் இரக்கம் மனத்தளவில் நின்று மறைவது. ஆனால், முரண்பாட்டால் விளைந்த பேர் அவலத் திற்குக் காரணமாக, அவ்வலத்தைக் கண்டு நாம் அடையும் துன்பம் மனத்தளவில் நிற்பதில்லை; மனம், சித்தம் என்ற இரண்டையும் தாண்டிச்சென்று நம் உயிரிலேயே சென்று தைக்கிறது. ஆன்மபூர்வமான இரக்கத்தை நம்மாட்டு உண்டாக்குகிறது. ஏனைய துன்பங்கள் மனத்தளவில் நின்றுவிட, அவலத்தால் ஏற்படும் துன்பம்மட்டும் உயிரிடைச் சென்று பதிவதற்கு ஒரு சிறந்த காரணமும் உண்டு. மற்றைய துன்பங்கள் பெரும்பாலும் உடலையோ அன்றி மனத்தையோ பற்றியன. வறுமை, நோய் முதலியவற்றால் ஏற்படும் துன்பங்களும் மனத்தையும் உடலையும்மட்டும் பற்றியன. வறுமைத் துன்பம் யாருக்கு உண்டாகிறது? மனத்தால் தன் வறுமையை எண்ணி, இன்பம் அனுபவிக்க முடியவில்லையே
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/31
Appearance