பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் யொன்று மடக்க முயல்வதும் உண்டு. முன்னர்க் கூறிய தளைகளையுடைய இருவர் மாட்டு நிகழும் முரண் பாடும் பின்னர்க் காட்டிய இதுவும் ஒன்றேயாம். மேலே கூறிய இருவரிடையேயும் காண்ப்படுவது அன்பு முதலிய தளைகள். உலகிடை வாழும் எல்லா உயிர்களையும், புல்பூண்டு முதல் மனிதன் ஈறாகவுள்ள அனைத்துயிரையும் ஒன்றுபடுத்தி நிற்கும் எந்த ஒரு சக்தி உண்டோ அதனை ஒன்றல் (Harmony) சக்தி என்று கூறுகிறோம். இவ்வொன்றலை அடிப்படை யாகக் கொண்டே கலைகள் அனைத்தும் தோன்று கின்றன. பல வேறுபாடுகளோடு உலகிடைக் காணப் பெறும் பொருள்கள் அனைத்தினுள்ளும் அவற்றை இணைத்து ஒன்றுபடுத்தும் சக்தி ஒன்றுள்ளது. அச்சக்தியைப் பிறர் அறிந்து மகிழுமாறு வெளியிடும் சாதனமே கலையாகும். வேற்றுமையினிடையே ஒற்றுமையைக் காண்பதே கலை என்ற கட்சியும் ஒன்றுண்டு. கலைகள் முயன்று முயன்று வெளியிட நினைப்பதெல்லாம் 'ஒன்றலாகிய ஒன்றையே. ஆனால், அவலமாகிய கலை ஒன்றுமட்டும் ஒன்றுதலில் இன்பந் தராது முரணில் இன்பந் தருகிறது. இவற்றின் இடையே என்றும் நிலைபெற்றுள்ளதும் ஒன்றோடொன்று ஒற்றுமைப்பட்டு நடைபெறுவதும் ஆனதன்மையை ஏனைய கலைகள் விரிக்கின்றன. ஒவியமும் சிற்பமும் அன்பு முதலிய இச் சக்திகள் ஒன்றுபட்டு இழைவதைக் காட்டுகின்றன. கணவன் மனைவி என்ற இருவரிடையே உள்ள அன்பு என்னும் தளை அவர்களிருவரையும் ஒன்றாய்ப் பிணித்துவைக் கிறது. இருவரும் பிணிக்கப் பட்டிருக்கிற நிலையை எக் கலையால் வெளிப்படுத்தினாலும், ஓவியமோ, சிற்பமோ, கவிதையோ எதுவாயினும்சரி. அங்குத்