பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் ஒன்றே இப்பொழுது அவலத்திற்கு அடிகோலிவிட்டது. இவ்வன்பை மேற்கொண்ட இருவரின் தராதரத்தையும் சிறப்பையும் நாம் கவனித்தலாகாது. அவர்கள் நல்லவர்களா? தீயவர்களா? என்ற வினாவெல்லாம் பின்னர் ஆராயப்படும் ஆனால், இப் போருக்குக் காரணமாக இருப்பது ஒன்றே. அஃது அன்பு என்று சொல்லப்படும். அவலத்திற்குக் காரணமான இம் முரண்பாடு நன்மைக்கும் நன்மைக்கும் இடையேகூட நிகழலாம். நன்மைக்கும் தீமைக்கும் இடையேயும் நிகழ்வது இயல்பு. அஃதாவது முரண் ஏற்பட்டுப் போரிடும் இருவரும் நற்பண்புகளால் நிறைந்தவர் களாகவே இருக்கலாம். உதாரணமாகத் தேசத் தலைவனான அரசன், அவன் குடிகளில் ஒருவன் என்ற இருவரிடையேயும் கருத்து வேறுபட்டால் முரண் ஏற்பட்டுப் போர் நிகழலாம். இருவரும் தாம் நன்மை என்று கருதும் ஒன்றற்காகவே போரிடு கின்றனர். இறுதியில் ஒருவர் அழிய நேரிடலாம். இருவரும்தாம் நன்மை என்று கருதும் ஒன்றற்காகவே போரிடுகின்றனர். இறுதியில் ஒருவர் அழிய நேரிடலாம். இப் போராட்டத்தில் தன்னலம் என்பதோ, பயன் கருதிச் செய்யும் இழிதொழிலோ ஒன்றும் இல்லை. இத்தகைய போராட்டத்தை நன்மைக்கும் நன்மைக்கும் இடையே நடைபெறும் போராட்டம் என்று கூறுகிறோம். இதன் மறுதலையாகத் தீமைக்கும் நன்மைக்கும் முரண் ஏற்பட்டுப் போர் நிகழ்வதும் உண்டு. இங்ங்னம் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெறுகிற போர் இரு மனிதர்களிடையே நடக்கலாம்; அல்லது ஒரே மனிதனிடம் காணப்படும் நன்மை தீமை ஆகிய இருபண்புகளின் இடையேயும் நடைபெறலாம்.