அவலம் 9 17 எவ்வாறாயினும் அஃது அவலம் என்றே கூறப்படும். இராவணனிடத்து நிகழும் அவலம் அவனிடத்தே காணப்படும் இரண்டு தனிப் பண்புகளின் இடையே தோன்றிய முரண்பாடாகும். அவனது அன்பிற்கும் மானத்திற்கும் (Honour) இடையே நடக்கின்ற போரே அவலமாகப் பரிணமிக்கிறது. அன்பு விரும்புகின்ற ஒன்றை மானம் தடுக்கிறது. இவை இரண்டையும் தனித்தனியே எடுத்துக்கொண்டால் அவற்றின் விருப்பங்களில் தவறு ஒன்றும் இல்லை. அன்பு, தான் விரும்பிய பொருளை எவ்வாறயினும் அடைய வேண்டும் என்று விரும்புவதில் தவறு இல்லை. மானமும் தவறான முறையில் சென்று அன்பு செய்யப்பட்ட பொருளை அடைவது தனக்குத் தாழ்வு என்று நினைப்பதும் தவறு இல்லை. இந்த இரண்டு பண்புகளும் தங்கள் தங்கள் எல்லையில் நிற்கின்ற வரையில், போர் நிகழ்வதில்லை. ஆனால், ஒன்று மற்றொன்றை அழித்துவிட்டுத் தானே ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைக்கையில்தான் முரண்பாடு முற்றிப் போர் மூளுகிறது. இனிப் பொதுவான கருத்துகள் சிலவற்றைக் காண்போம். இப் பண்புகளும் தளைகளும் அவலத் திற்குக் காரணமாகவிருத்தல் அவை வெளிப்படும் தலைவர்களைப் பொறுத்தே இருக்கின்றன. அவலத் தலைவனது சிறப்புகளில் சிறந்ததும், அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதும் ஆகிய ஒரு பண்பு என்னவெனின், தான் மேற்கொண்ட செயலின் நன்மை தீமை ஆராயாது இறுதிவரை அதைக் கொண்டு செலுத்தும் தன்மையாம். இங்ங்னம் கூறுவதால் அவனுக்கு வேறு பண்புகளே இல்லையென்ற கருத்தில்லை.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/36
Appearance