பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் எத்தனையோ பண்புகள் இருக்கலாம். ஆனால் போருக்குக் காரணமாக உள்ள இரண்டு பண்புகள் அவற்றையெல்லாம் அடக்கித் தாம்மட்டும் தலை துரக்கி நிற்கும். இவ்விரண்டனுள் ஏதோ ஒன்றோடு தலைவன் மனப்பூர்வமாக இணைந்துவிடுகிறான். அங்ங்னம் அவன் இணைந்த பிறகு அதனைக் கொண்டு செலுத்துவதில் அரைகுறை வேலை செய்வ தில்லை. தான் வேறு என்றும், அப் பண்பு தன்னால் கொண்டு செலுத்தப்படும் ஒரு குணமே தவிர, அதனால் தான் கொண்டு செலுத்தப்படுதல் கூடாது என்றும் அவன் நினைப்பதில்லை. அதற்கு மறுதலை யாக அவன் ஆகிவிடுகிறான். இதனால் அவன் அப்பண்பின் எதிரான எதையும் முறையானது என்று எடுத்துக்கொள்ளுவதில்லை; அதன் மறுதலையான பண்பிலும் சிறிய நியாயம் இருத்தல்கட்டும் என்ற எண்ணமே அடைவதில்லை. அத்தலைவனிடம் வேறு எத்தகைய நல்ல பண்புகள் இருப்பினும், பிறர் வியக்கத் தகுந்த குணங்களிருப்பினும் அவையெல்லாம் முரண்பாட்டால் விளையும் அவலத்தில் தலையெடுப்பதில்லை. அவை அனைத்துஞ் சேர்ந்து அம்முரண்பாட்டிற்கே துணை செய்கின்றன. 'இராவணன் ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து அறிவு அமைந்தவன் தான். அப்படிப்பட்ட அவன் சீதைபாற் கொண்ட காமத்தால் அவலத் தலைவனாக ஆகும்பொழுது, காமம் அவன் பண்புகளில் ஒரு பகுதியாக அமையவில்லை. அவன் அக் காமமாகவே மாறிவிடுகிறான்; அக் காமத்தின் முன்னால் வானமும் வையமும் வளர்ந்த வான் புகழையும்', தனது 'அறிவையும் இந்திரப் பெரும்பதத்தையும் பலியிட்டு விடுகிறான்.