அவலம் 19 இங்ங்னம் இரண்டு முரண்பட்ட பண்புகளின் இடையே நடக்கின்ற போரில் ஒன்றும் முற்றிலும் வெற்றி பெறுவதில்லை. அங்ங்ணம் வெற்றிபெறாமற் போவது விதியின் விளையாட்டு மட்டு மன்று. அஃது இயற்கையின் கூறுபாடுமாகும். ஏனெனில், இப்பண்புகள் அனைத்தும் தலைவனுக்கு உறுப்புக் களாக அமையவேண்டுமென்பது இயற்கையின் கட்டளை. அதனைவிட்டு அவை தலைமை இடத்திற்குப்போராடுகின்றன; ஏனைய உறுப்புகளைத் தள்ளித் தாங்களே தலைமை வகிக்க வேண்டும் என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல், உறுப்புகளையுடைய தலைவனையும் தங்கள் வசப்படுத்தி அடிமைப்படுத்த முயல்கின்றன. அறிவின் உதவியால் இவ்வுறுப்பாகிய பண்புகளைத் தலைவன் அடக்கி, ஆட்சி செய்து, அவ்வவற்றிற்குக் கொடுக்கவேண்டிய இடம் கொடுத்து வைக்காது பேர்வானேயாகில் அவற்றுள் சில, முரண்டி அவனை அடிமைப்படுத்த முயல்கின்றன. அங்ங்ண்ம் போரிடும் அப்பண்புகளுள் ஒன்று முற்றிலும் வெற்றிபெறுமேயானால் அஃது இயற்கையின் கட்டளைக்கு மாறாக முடியும். காரணம் என்னை ? மனித மனம் பல பண்புகளின் கூட்டுறவால் ஆயது. அவனது வாழ்க்கை செம்மையடைவதற்கேற்ப இவை அமைந்துள்ளன. இவற்றுள் ஏதேனும் ஒன்று மிகினும் வாழ்க்கை செம்மையாக நடவாது. அங்ங்னம் மிகுகிறபண்பு நற் பண்பாகவே இருப்பினும் பயன் நன்மையாக இருக்கும் என்று கூறல் இயலாது. இங்ங்ண்ம் அவ்வவற்றிற்குரிய அளவோடு அவை அவை அமைந்தாலொழிய உலகம் நன்கு நடை பெறாது. எனவே, இவற்றுள் ஒன்று மற்றொன்றை
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/38
Appearance