பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவலம் 21 பண்பும் தோல்வியடைந்த பண்பு பெற்ற நட்டத்தை அடைகிறது. எனவே, பெயரளவில் வெற்றி ஏற்படுகிறதே தவிர, முழுவெற்றி என்று அதனைச் சொல்வதற்கில்லை. இயற்கை இறுதியில் தரும் இம் முடிவு பல வகையில் தரப்படலாம். முரண்பாட்டில் தொடங்கிய பொருள்கள் தம்முள் ஒத்துப்போய்விடலாம். இரண்டு உரிமைகளும் ஒன்றை ஒன்று பொறுத்துக் கொண்டு போய்விடலாம். அவ்வாறாயின் முடிபு துன்பமின்றிக் கிடைத்துவிடுகிறது. அவலத் தலைவன் தன் தவற்றை உணர்ந்து அதற்கு இரங்கித் கழுவாய் தேடிக் கொள்ளலாம். அதுவும் ஒரு முடிவே. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இறுதிவரைப் போராட்டம் நீடிக்கப்படுகிறது. ஒரு பண்பு இறுதியில் அழிக்கப்படும் வரையில் போர் நடைபெறுகிறது. அழிக்கும் பண்பும் அவ்வேளையிலே சிறிது அழிக்கப்படுகிறது. இந்நிலையில், அவ்லத் தலைவனும் அவனோடு தொடர்புடையாரும் அழிக்கப் பெறுகின்றனர்; இழவு (Catastrophe) நேரிடுகிறது. இந்நிலையில் 'அறம்' அழிக்கும் சக்தி யுள்ளதாகவும் காணப்படுகிறது. இவ்விறுதி இழவில் நாம் ஒருவகை ஆறுதலை அடைகிறோம். போரிட்ட பண்புகள் முற்றிலும் மடிவ தில்லை. ஆனால், அவை எல்லையற்றுச் சென்று, பிற பண்புகளையும் அடக்கி ஆள முற்பட்ட தன்மையே அழிக்கப்படுகிறது. தமிழிலக்கியங்களிற் காணப்படும் அவலங்களில் இவ்விரண்டு பண்புகளுமே சிறக்கக் காணலாம். இராவணன் அவலத்திற்கு அடிப்படை காமமும் மானமும்;