அவலம் 23 முற்பட்டுவிடுகிறது. மானம் சிறந்ததாயினும் அஃது அறிவு, ஞானம் போன்ற மற்றப் பண்புகளை நீக்கி ஆட்சி செய்ய முற்பட்டமையின் அவன் அழிவு நேரிட்டது. கோவலன் மாதவிபால் கொண்ட காதலுக்கும், அவளைப் பிரிந்த பின்னர் அவன் உணர்ந்த மானத் திற்கும் நிகழ்ந்த பூசலே அவனது அவல நாடகமாக ஆகவிட்டது. மாதவிபால் வாழுகின்ற வரையில் எவ்வாறு மற்ற உலகத்தை மறந்திருந்தானோ அவ்வாறே அவளை விட்டு நீங்கினதும் ஏனைய உலகை அவன் மறந்துவிட்டான்; தான் வாழ்ந்த வாழ்க்கையில் அடைந்த தோல்வியைப் பிறர் அறியு முன்னர்த் தான் வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்று நினைத்தான். அவ்வாறு செல்ல, அவன் நினைவைத் துாண்டியது மானம் ஒன்றே. அங்ங்ணம் அவன் செய்திருக்க வேண்டா என்பதை நாம் அறிவோம். மீண்டும் அவள்பால் செல்லாமல் அவன் வாழ்ந்திருப்பின் அதுவே மானம் காத்தமையை அறிவித்திருக்கும். ஆனால், அவன் மதுரை சென்றது மானமாகிய பண்பை மிகைப்படுத்தியதாகும். இதுவே அவன் சாவிற்குக் காரணமாகிவிட்டது. அவலங்கள் தோன்றும் காரணம்பற்றி அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். அவற்றுள் முதலாவது இரண்டு தன்னலமற்ற பண்பாடுகளுள் தோன்றும் போராட்டம்பற்றி நிகழுகிற அவலம். இத்தகைய அவலம் தமிழ் இலக்கியத்தில் காணப்படுவதில்லை. காரணம், நன்மைக்கும் நன்மைக்கும் முரண் ஏற்படுவதைப் பழந்தமிழர் ஏற்றுக் கொண்டதே இல்லை. பிறர் பொருட்டாகத்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/42
Appearance