பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவலம் 25 விடை இறுத்துப் பயனில்லை. முறையற்ற தென்றே யாவரும் ஒப்புக்கொள்வோம். ஆனாலும், முறையற்ற ஆசை இவ்வளவு தூரம் வாதாடலாமா எனின், அதற்கு அவனே விடை கூற முடியும். அவலத்தில் இக்கேள்விக்கும் அவசியமில்லை என்றே கூறிவிடலாம். நாம், ஒழுக்கம் என்றும், சட்டம் என்றும், கட்டுப்பாடு என்றும் வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல் களைக் கொண்டு இவ்வவலத் தலைவர்களின் செயலை அளவிட முடியாது. நம் சட்டதிட்டங்களே அவர்கட்கும் ஏற்றனவாக இருப்பின் நமக்கும் அவர் கட்கும் வேற்றுமை இல்லாமற் போய்விடும். அவ்வாறாயின், அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதர்களாக ஆவார்களே தவிர அவலத் தலைவர் களாக ஆகமாட்டார்கள். அவர்களின் சட்ட திட்டங்களை அவர்களே வகுத்துக் கொள்கிறார்கள்: ஆதலால் செயலும் செயலுக்கேற்ற முடிவும் இருக்கின்றனவா எனக் காண்பதே அவலத்தின் நோக்கமாகும் என்கிறார் ஹேகல் என்ற பெரியார். தமது இன்பம் ஒன்றையே கருதி வாழ்ந்த அவலத் தலைவராகிய இராவணன் போன்றார் இலக்கியத்தில் இடம் பெறுவது இராமன் பெருமையை மிகுதிப் படுத்திக் காட்டவேயாகும் என்று ஒரு சிலர் நினைக் கின்றனர். இது தவறு. தவறான செயலில் ஈடுபடினும், தன்பாலுள்ள ஏனைய சிறந்த பண்புகளால் இராவணன் ஒரு தலைவனுக்கு வேண்டும் சிறப்புகள் அனைத்தையும் பெற்றிருக்கிறான். இறுதியில் அவன் இறக்கும்பொழுது தகுந்த தண்டனையை அடைந் தான் என்ற எண்ணம் மட்டும் நமக்குத் தோன்ற வில்லை. தான் என்ற எண்ணம் மட்டும் நமக்குத் தோன்றவில்லை. அதற்குப் பதிலாக, வருத்தத்தையும்